பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

தொழுகையாளி எந்தத் தவறுதலுக்கும் இடம் தராதவனாகத் தன் வாழ்க்கைத் தேரை நகர்த்த வேண்டியதாகிறது என மேலும் நான் விவரித்த என் விளக்கத்தைப் பொறுமையாகச் செவிமடுத்த டிசில்வா அகமகிழ்ந்தவராக, "அறியாத்தனமாக அப்படியொரு கேள்வியைக் கேட்டு விட்டேன். ஒரு மனிதன் தனக்குத் தானே கட்டுப்பாடுகளையும், தனக்குத்தானே கடுமையான விதிமுறைகளையும், தனக்குத் தானே கடிவாளமாக போட்டுக் கொண்டு, நெறி பிறழா வாழ்வு வாழ இத்தொழுகை முறையைத் தவிர வேறு எந்த முறையும் இருப்பதாகத் தெரியவில்லை. உன்னதமான கொள்கையும் உன்னதமான தத்துவமும் உன்னதமான முறைகளும் உங்கள் தொழுகை முறையில் அமைந்திருப்பதை மிகவும் உணர்கிறேன்" எனக் கூறித் தன் மகிழ்வைப் புலப்படுத்தினார்.

இதை வேறு ஒரு முறையில் உணர்ந்து தெளியும் வாய்ப்பு எனக்கு ஒரு முறை சென்னையில் வாய்த்தது.

ஒரு நாள் மாலை தலைமைச் செயலகம் சென்றிருந்த நான், அங்கிருந்த திரு ராமகிருஷ்ணன் எனும் அரசு அதிகாரியை சந்திக்கச் சென்றிருந்தேன். பிராமண குலத்தைச் சார்ந்த அவர் என் மீது அன்புமிக்கவர். நான் சென்ற நேரம் அவர் வீட்டிற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அவருடன் அவர் துணைவியாரும் இருந்தார். என்னையும் தன்னோடு வீட்டிற்கு வரும்படி அழைத்தார். நானும், அவர்களுடன் சென்றேன். நாங்கள் சென்ற கார் வழியில் ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர் கடைமுன் நின்றது. 'ஹாதி ஸ்டோர்' என்ற அந்தக் கடை ஒரு முஸ்லிமுக்குச் சொந்தமானது. இவர் காரைக் கண்டவுடன் கடைப் பையன் ஒரு பெரிய மளிகைச் சாமான்கள் அடங்கிய பெட்டியைத் தூக்கி வந்து கார் டிக்கியில் வைத்தான். பின் கடைக்காரப் பையன் தந்த பில்லுக்குண்டான பணத்தை எடுத்துக் கொடுத்தார். அவன் பணத்தைப்