பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

கண்ணோட்டத்தோடும் காண அறிவுலகு முனைந்துள்ளது. இவ்விருகண்ணோட்டங்களும் இஸ்லாத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள பேருதவியாக அமைந்துள்ளதெனில் அஃது மிகையன்று. அத்தகைய சிந்தனைக் கோணங்களைச் சுட்டிக் காட்டுவதுதான் இவ்வுரைச் சுருக்க நூலின் தலையாய நோக்கம். அது ஓரளவு நிறைவேறியிருப்பதாக எண்ணி மனநிறைவடைகிறேன்.

நான் துபாயில் தங்கியிருந்த இருபது நாட்களும் எனக்குத் தோன்றாத்துணையாக இருந்த ஈமான் அமைப்பின் துணைச் செயலாளர் ஜனாப் லியாகத் அலி அவர்களையும் என்னை நிழல் போல் தொடர்ந்து என் தேவைகளைக் கவனித்துக் கொண்ட எழுச்சி மிகு இளைஞர்கள் ஜனாப் முஹம்மது நியாஸ், சாதிக், இசைக் கவிஞர் அஷ்ரஃப் அலி ஆகியோரையும் என் மீது அன்பு பொழிந்த சமுதாயப் பெருந்தகை அல் ஹாஜ் பி.எஸ்.ஏ.ரஹ்மான் சாஹிப் அவர்கள், ஈமான் பேரமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யத் எம்.ஸலாஹுத்தீன் சாஹிப் அவர்கள், ஈமான் பேரமைப்பின் பேரங்கமாகத் திகழும் அல்ஹாஜ் ஹபீபுல்லா சாஹிப் அவர்கள் மற்றும் அல்ஹாஜ் அப்துல் கதீம் சாஹிப், கவிஞர் அப்துல் சம்ஸ்தீன் சாஹிப் சடைன் அமானுல்லா மற்றும் தாஹா போன்றவர்கள் காட்டிய அன்பும் அரவணைப்பும் என்னால் என்றும் மறக்க முடியாதவை.

இந்நூல் வெளிவர ஆதரவுக்கரம் நீட்டிய ஈமான் அமைப்புக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். ஈமான் அமைப்பு தோன்றிய காலம் முதலே அதனோடு எனக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு இருந்தே வருகிறது. சமுதாய எழுச்சிக்கு, குறிப்பாக, இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஆக்கமான முறையில் அருந்தொண்டாற்றி வெள்ளி விழாக் கொண்டாடி மகிழும் நேரத்தில் இந்நூல் வெளி வருவது பெரு மகிழ்வளிக்கிறது.