பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

ஆசிரியரின் கற்பிக்கும் நோக்கம்

1. மாணவர்களுக்குக் கற்கும் சூழ்நிலையை உருவாக்கித் தருதல்.

2. மாணவர்கள் கற்க உற்சாகப்படுத்துதல்.

3. மாணவர்களின் உடலும் மனமும் உறுதியுடன் வளர பயிற்சி தந்து உதவுதல்.

4. மாணவர்களின் ஆர்வத்தை அறிந்து, அதற்கேற்ப கற்பித்தல்.

5. மாணவர்கள் கற்பனைச் செறிவுடன் பணியாற்றத் துண்டுதல்.

6. நற்குணங்கள், நல்லுணர்வுகள், நற்செயல்கள் ஆற்ற உற்சாகப்படுத்துதல்.

7. தன்னம்பிக்கையுடன் செயல்படும் துணிவை ஊக்குவித்தல்.

8. தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை உணரச் செய்து, அவர்களை அந்தத் துறையில் செலுத்தி, உதவுதல்.

இத்தகைய சிறப்புக்களை வளர்க்கும் முனைப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள், தாங்கள் கற்பிக்கின்ற பாடப் பொருளை, எவ்விதம் கற்பிக்க வேண்டும் என்பதற்கு, சில வழிமுறைகள் உள்ளன. அப்படிப்பட்ட கற்பிக்கும் முறைகள் பற்றி இங்கே காண்போம்.

1. பாடப்பொருளும் பாடமுறையும்

ஆசிரியர் தான் கற்பிக்கப்போகின்ற பாடத்திற்கு ஏற்பவே, பாடமுறையைப் பகுத்துக் கொள்ள வேண்டும்.