பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

போகிறது. எனவே, பொறுமையைக் கடைபிடிக்கும்போது. திறமையும் கூடும். தேர்ச்சியும் பெருகும்.

7. மாணவர்களின் தன்மையறிந்து!

உடற்கல்வியை போதிக்கிறபோது, மாணவர்களின் கூட்டத்தை மட்டும் மதிப்பிட்டு விடக்கூடாது. அவர்கள் தோற்றத்தையும், உடல் அமைப்பையும், உள்ளத்தின் இயல்புகளையும் உணர்ந்து, அவற்றிற்கு ஏற்ப, கற்பித்து விடவேண்டும்.

(அ) உடலமைப்பு கருத்துக்கள் (Anatomy & Physiology)

1. வயதுக்கேற்ப பயிற்சிகளை அளிக்க வேண்டும்.

2. ஆண் பெண் வேறுபாடுக்கு ஏற்ப, பயிற்சியின் அளவு வேண்டும்.

3. எந்தப் பயிற்சிக்கும் முன்னதாக, உடலைப் பதப்படுத்தும் பயிற்சிகளை செய்திட, கட்டாயப்படுத்த வேண்டும்.

4. களைப்பு உண்டாவதற்கு முன், பயிற்சிகளை முடித்து விடவேண்டும்.

(ஆ) உளவியல் கருத்துக்கள் (Psychology)

1. பயிற்சியில் ஈடுபட, ஆர்வத்தை முதலில் ஊட்ட வேண்டும்.

2. ஒரு காரியத்தைக் கற்றுக் கொள்ள, செயல்படுகிற போது தான் சிறப்பாகப் பெற முடியும்.