பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

பாடப் பொருள் பற்றிய சிந்தனையை, மனதில் படம்: பிடித்துக் கொண்டு அறியுமாறு விளக்கம் தரும் முறை (Description).

எதற்காகக் கற்றுக் கொள்கிறோம் என்பதை மாணவர்கள் உணர்ந்து, அதில் ஆர்வம் கொண்டு, எப்படி செயல் படுவது, மேம்படுத்துவது என்பதாகப் போதிக்கும் முறை. (Explanation).

இதை சொல் விளக்க முறை - என்றும் (Verbal Explanation) என்றும் கூறுவார்கள்.

2. செயல் விளக்கம் தருதல் (Demonstration)

உடற்கல்வி என்பது செய்து கொண்டே பழகுதல் ஆகும் ஆகவே, எந்தப் பாடத்தையும் பயிற்சியையும் செயல் மூகாம் காட்டி, செய்யச் செய்து, தேர்ச்சி பெறுமாறு செய்வது தான் செயல் விளக்க முறையாகும்.

3. ஆராய்ந்தறிய உதவுதல் (Exploration)

மாணவர்கள் தாங்கள் அறிந்தவற்றை, கண்டு கேட்டவற்றை செயல்படுத்திப் பார்த்த பிறகும், மேலும் அது பற்றி ஆராய்ந்து, துருவித் துருவி ஆராயும் சூழ்நிலையை உண்டாக்கும் முறை இது இதை ஆய்வுக்கூட முறை என்றும் கூறலாம்

4. கலந்துரையாடல் (Discussion)

தனிப்பட்ட முறையில் தாங்கள் புரிந்து கொண்டதை மற்ற மாணவர்களுடன் கலந்துரையாடச் செய்து, மேலும் தெரிந்து கொள்ள உதவுதல். இந்த உரையாடலில் ஆசிரியர்