பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

முக்கிய பங்கை வகிக்கிறார். சிக்கல்களை தீர்த்து. ஐயத்தை விளக்கி, உரிய பாடத்தில் சீரிய கருத்துத் தெளிவு காணும் முறை இது.

5. மேற்பார்வை காணல் (Supervision)

தான் கற்றுத் தந்ததை. கற்றுக் கொண்டவாறு, மாணவர்கள் பயிற்சி செய்கிறார்களா என்பதை, ஆசிரியர் மேற்பார்வையிடுதல். இந்த முறை, மாணவர்கள் செய்கின்ற தவறுகளை சுட்டிக் காட்டவும், தைரியத்துடன் பயிற்சிகளைத் தொடரவும் உதவும்.

6. மதிப்பீட்டு முறை (Evaluation)

மாணவர்கள் கற்றுக் கொண்டதில், பெற்ற முன்னேற்றத்தைப் பேரார்வத்துடன் தெரிந்து கொள்ள உதவும் முறை.

எந்த அளவு, எவ்வளவு தெளிவு, எத்தனைச் செறிவு, அவர்களின் கற்றல் திறன் இருந்தது; ஆசிரியரின் கற்பிக்கும் திறன் இருந்தது என்பதை, பல தேர்வுகள் மூலம் கண்டறிந்து, மதிப்பீடு செய்வதன் மூலம், கற்பிக்கும் யுக்தி, சக்தி பெற்றுக் கொள்கிறது.