பக்கம்:கடவுள் பாட்டு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

அந்தப் பிள்ளை குறுஞ்சிரிப்பில்
அழகிய உன்றன் நகைகண்டேன்
மந்த மற்றுக் குறும்பியற்றி
மகனும் ஒடி விளையாட
எந்தாய் உன்றன் திருவிளையாட்
டெனவே கண்டு மனமகிழ்ந்தேன்
சொந்தக் குழந்தை மழலையிலுன்
சொக்கும் தெய்வ மொழிகண்டேன்.

21


ஆகும் பொருள்கள் அத்தனையும்
ஆக்கிப் படைப்போன் நீஐயா!
ஆகி நின்ற பொருளெல்லாம்
ஆண்டு காப்போன் நீ ஐயா!
ஆகிக் காலம் ஆனதன்பின்
அனைத்தும் அழிப்போன் நீ ஐயா!
ஆக உன்றன் மனவிருப்பே
அனைத்தும் எனக்கண் டேனையா!

22


அண்டச் சுழற்சி அத்தனையும்
ஐயா உன்றன் ஆணையன்றோ!
உண்டோர் ஒழுங்கென் றுரைத்திடவே
உருட்டு கின்றாய் முழுதும் நீ
கண்ட ஒழுங்கு மீறுமெனில்
காற்று மீறும் ஊழியிலே
அண்டம் அனைத்தும் பொடியாகும்
அருளின் கடலே அதுவேண்டாம்!

23


வயலில் உழைத்துக் களைத்தவர்க்கு
வாரிக் குடிநீர் வழங்கிடுவாய்
வெயிலில் மழையில் அலைந்தவர்க்கு
வீடும் நிழலும் கொடுத்திடுவாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/15&oldid=1201930" இலிருந்து மீள்விக்கப்பட்டது