பக்கம்:கடவுள் பாட்டு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

பற்றால் வந்த துன்பமெலாம்
ஐயா உன்தாள் பற்றிவிட்டால்
எற்றி யடித்த காட்டெருமை
எகிறி யோடல் போலோடும்
குற்ற மற்ற பேரொளியைக்
கொடுக்குஞ் சுடரே, என்நெஞ்சைச்
சற்றும் விட்டுப் போகாதே
தங்கி நலத்தைக் காப்பாயே!

35


கதிருக் கொளியைப் படைத்தாய்நீ
காட்சிப் பொருளுக் கெழில்கொடுத்தாய்
எதிலும் இன்பம் தரும்அமைப்பை
இருத்திப் படைத்தாய் எம்பெருமான்
புதிரைப் போன்ற உன்படைப்பைப்
புரிந்து கொண்டால் வரும்இன்பம்
எதற்கும் நிகரா காததனை
எனக்கும் புரிய வைத்தாயே!

36


உன்றன் அருளால் பெண்ணின்பம்
உற்றுத் துய்த்தேன் எம்பெருமான்
ஒன்றன் பின்னொன் றாய்வந்தே
உற்ற பிள்ளைக் கூட்டத்தை
என்றன் உழைப்பு முயற்சியினால்
ஏந்தி வளர்த்துப் பெரிதாக்கி
நின்றேன் ஐயா உன்கருணை
நிலைக்கும் என்பால் என நம்பி!

37


நம்பி னாரைக் கைதுரக்கி
நடக்கச் செய்யும் அருளுடைய
எம்பி ரானே உனை நம்பி
இருந்தேன் இந்தப் பேருலகில்.

-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/19&oldid=1201924" இலிருந்து மீள்விக்கப்பட்டது