பக்கம்:கடவுள் பாட்டு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44



மங்கு சிறிய தெய்வமெலாம்
மதித்துப் பணிந்து வணங்கேன் நான்
பொங்கும் உன்றன் அருளிருக்கப்
பொருளற் றவற்றைப் பணிந்திடவோ?
129

அந்தத் தெய்வம் சக்தியுள
ததனைப் பணிவோம் என்றிடுவார்
இந்தத் தெய்வம் கீர்த்தியுள
திதனைப் பணிவோம் என்றிடுவார்
எந்தத் தெய்வம் ஆனாலும்
இறைவா உன்றன் அருளின்றேல்.
அந்த ரத்தே பறந்துவிடும்
அதையேன் பணிய வேண்டுவதோ? 130

இன்ப வடிவம் கொண்டென்றன்
இதய மலரில் வீற்றிருக்கும்
அன்புப் பொருளே பெருவெளியில்
அறிவின் ஒளியாய்ப் பரந்தவனே
என்புந் தோலும் கொண்டமைந்த
ஏழை யேனைத் திருவடியின்
முன்பு வைக அருள்புரிவாய்
முழுதும் இன்பம் கொள்வேனே!
131

ஒப்பில் லாத முழுமுதலே
உன்னை யன்றி எவ்விடத்தே
தப்பில் லாத நலங்கிடைக்கும்
தாங்கிக் காக்க வந்திடுவாய்
செப்பின் சிலையைத் தெய்வமெனச்
சிந்தை கொள்ளும் மடமையெலாம்
இப்போ தில்லை மெய்ப்பொருளே
என்பால் அன்பு கொண்டிடுவாய்.

132

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/46&oldid=1212474" இலிருந்து மீள்விக்கப்பட்டது