பக்கம்:கடவுள் பாட்டு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47


எண்ணி எண்ணி உன்னருளை
எய்திக் களித்த நிலைதனிலே
வண்ணத் தமிழில் நான்பேசும்
வார்த்தை யெல்லாம் கேட்டிருந்தோர்
அண்ணன் ஏதோ பித்தேறி
ஆடு கின்றான் என்றுரைத்தார்
கண்ணின் இனிய பெருமானே
கருத்தி லாரைத் திருத்தாயோ.
140

பாரில் உள்ள இடமெல்லாம்
பரந்துள் ளாயென் றோர்கில்லார்
ஊரில் உள்ள கோயிலெல்லாம்
உள்ளாய் நீ யென் றோடுகின்றோர்
நேரில் வருவாய் உள்ளத்தே
நேயம் மிகுத்தால் என்றறியார்
தேரில் வருவாய் நீ யென்றே
திருவி ழாவிற் கூடுகின்றார்.
141

காவிட் டுயிர்கள் பலவற்றைக்
காப்பாய் எம்மை எனக்கூவிப்
பூவிட் டுன்னை நாள்தோறும்
போற்றி செய்தல் அன்பாமோ
ஆவிக் கினிய வழிகாட்டும்
ஐயா உன்றன் திருவடியைப்
பாவித் துளத்தே வழிபட்டால்
பரமானந்தம் கிட்டாதோ? 142

காற்றிற் கலந்த இசைபோலே
கண்ணிற் புகுந்த ஒளிபோலே
நாற்றிற் பச்சை நிறம்போலே
நல்லேன் உளத்திற் கலந்தோனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/49&oldid=1212483" இலிருந்து மீள்விக்கப்பட்டது