பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14



    Input  : உள்ளீடு
    Inputting  : உள்ளிடுதல்
    Input data : உள்ளிட்டுத் தரவு
    Input Unit : உள்ளிட்டகம்

எனக் குறிக்கலாம்.

தலைப்பெழுத்துகளைக் கொண்ட குறும்பெயர்களை ஒலி பெயர்ப்பாக இணைந்து வரும் சொற்களுக்குப் பொருள் தரும் வகையில் அமைக்கலாம். சான்றாக,

    PERT Chart  : பெர்ட் வரைபடம்
    PET Computer : பெட் கணினி

மற்றபடி, நிறுவனப் பெயர்கள், மென்பொருள் தொகுப்புப் பெயர்கள், பொருட்பெயர்கள், அளவீடுகள் மற்றும் சிறப்பு பெயர்களை ஒலி பெயர்ப்பாகக் குறிக்கலாம்.

    Macpaint  : மாக்பெய்ன்ட்
    HertS  : ஹெர்ட்ஸ்
    Javlin plus : ஜேவ்லின் பிளஸ்
    Hentry  : ஹென்றி

மற்றொன்று ஒலிக்குறைபாடு. ஸ ஷ, ஜ, ஹ, க்ஷ ஒலிக்குறிகள் தமிழில் இல்லாததால் Geoge-ஐ குறிப்பிடும்போது 'சார்சு' என்றுதான் எழுத நேரும். இவ்வொலிக் குறைப்பாட்டை நீக்க 'ஜார்ஜ்' என்றே எழுதலாம். ஏனெனில், கிரந்த எழுத்துகள் எனக் கருதப்படும் ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ போன்ற எழுத்துகள் சமஸ்கிருத வரிவடிவங்கள் அல்லவே அல்ல. அவை ஒலி வடிவங்கள் மட்டுமே. சில சம்ஸ்கிருத ஒலிகளை உரிய முறையில் வெளிப்படுத்த தமிழில் எழுத்துகள் இல்லை என்ற குறைபாட்டை நீக்க, பல்லவர்கள் காலத்தில் காஞ்சி மாநகரில் தமிழ் வரிவடிவச் சாயலில் புதிதாக உருவாக்கப்பட்ட எழுத்துகளாகும். இவ்வெழுத்துகள் கன்னடத்திலோ தெலுங்கிலோ இல்லை. தமிழிலும் தமிழிலிருந்து கிளைத்த மலையாளத்திலும் மட்டுமே உள்ளன. அதிலும் கிரந்த எழுத்துகள் பலவாக இருந்தாலும் இந்த நான்கைந்து எழுத்துகளை மட்டுமே தமிழ் பட்டும்படாமலும் தன்னுடன் உறவாட