பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15


அனுமதித்து வருகிறது. எனவே, ஆங்கில எழுத்தொலியை ஒலி பெயர்ப்பின்போது முழுமையாகப் பெற இக்கிரந்த எழுத்துகளை பயன்படுத்துவதில் தவறேதும் இல்லை என்றே கருதுகிறேன்.

இப்போது வெளியாகும் இப்பேரகாதிக்கு ஒரு சிறப்பு உண்டு. பயன்பாட்டுக்கு வந்திருப்பினும் ஆங்கில அகராதியில் இடம்பெறாத பல புதிய சொற்கள் இப்பேரகராதியில் இடம் பெற்றுள்ளன. இதற்காக அமெரிக்கா, கனடா, ஃபிரான்ஸ் நாடுகள் சென்றிருந்தபோது இக்கலைச் சொற்களைச் சேகரிக்க இயன்றது. ஆங்கில அகராதிக்கும் முந்தி, தமிழ் அகராதியில் நேர்ச் சொல்லாக்கம் இயல்கிறதென்றால் தமிழ் இயல்பிலேயே ஆற்றல் மிக்க அறிவியல் மொழி என்பது தெளிவாகிறதன்றோ!

இப்பேரகராதி சிறப்பாக வெளிவரப் பெருந்துணையாலமைந்த கணினித்துறை வல்லுநரும் சிறந்த கணினி எழுத்தாளருமான திரு. மு. சிவலிங்கம், என் உடன் படித்த கல்லூரித் தோழரும் அறிவியல் அறிவும் தமிழறிவும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற புலமைச் செல்வர் இரா. நடராசன், கணினித் தமிழ் புலமைமிக்க பன்னூலாசிரியர் திரு. ராம்குமார் ஆகியோரின் உதவியும் ஒத்துழைப்பும் மறக்க முடியாதவை. அவர்களுக்கு என் இதய நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சிவடைகிறேன்.

என் அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பணிக்கு அடிநாள் தொட்டே பெருந்துணையாகவும் பெரும் ஊக்கியாகவும் இருந்து வருபவர் என் துணைவியார் சித்தை செளதா அவர்களாவர். இப்படியொரு பேரகராதி உருவாக்கப்பட வேண்டும் என்ற உணர்வை என்னுள் இடையறாது விதைத்து வந்தவர். இப்பேரகராதி உருவாக்கத்துக்கு எல்லா வகையிலும் பேரூதவியாயிருந்த அவர்கட்கும் எனது தமிழ் வளர்ச்சிப் பணி முயற்சிகளுக்கும் சமுதாயப் பணிகளுக்கும் பெருந்துணையாயிருந்து வரும் பெருந்தகை அல்ஹாஜ் (மெஜஸ்டிக்) கே. வி. எம். கறீம் அவர்கட்கும் என் நன்றி என்றும் உரித்தாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக இன்று 1, 600 பக்கங்களைக் கொண்ட கணினிக் களஞ்சியப் பேரகராதி (வேறு இந்திய