பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

கணினிக் கல்வியின் இன்றியமையாமை

கணினியின் ஆதிக்கம் பரவப் பரவ கணினி அறிவியலைக் கற்றுத் தேர்வதும் கட்டாயமாகிவிட்டது.

ஒவ்வொரு எந்திரத்திலும் அதற்கே உரிய பாகங்கள் இருகின்றன. ஆனால் ஸ்குரூ டிரைவர் என்று சொல்லப்படும் திருப்புளி எந்த எந்திரத்தின் பாகமும் இல்லை. ஆனால் திருப்புளி இல்லாமல் எந்த எந்திரத்தையும் கையாள முடியாது. எந்தவொரு எந்திரத்தையும் கழற்ற, பழுதுபார்க்க, இனணக்க, பராமரிக்க திருப்புளி ஒரு கருவியாகப் பயன்படுகிறது. கணினியைத் திருப்புளிக்கு ஒப்பிடலாம். தொடக்க காலத்தில் குறிப்பிட்ட எந்திரத்தின் பாகம் போல் விளங்கிய கணினி இன்றைக்கு அனைத்து எந்திரங்களையும் கையாள வல்ல திருப்புளியாய் ஆகிவிட்டது.

ஆம். ஒரு காலத்தில் பல்கலைக் கழகங்களில் ஒரு பாடமாகவே இருந்து வந்த கணினி அறிவியல் நாளடைவில் தொழில்நுட்ப அறிவியலின் ஒரு துறையாக வளர்ச்சி பெற்று, இன்றைக்கு எந்த ஒரு அறிவியல் துறையையும்து அணுகி ஆய்வு செய்ய உதவும் ஒரு கருவியாகப் பரிணமித்துள்ளது. எந்த அறிவியல் பாடடத்தைக் கற்பவராயினும், எந்த தொழில்நுட்பத் துறையில் பயில்பவராயினும் கணினி அறிவியலையும் கற்றிருக்க வேன்டும் என்பது கட்டாயத் தேவையாகி விட்டது.

தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பம்

தமிழ்நாட்டின் சின்னஞ்சிற்றூர்களில் மூலை முடுக்குகளில் எல்லாம் கணினி கற்றுத்தரும் பயிற்சி மையங்கள் ஏராளமாய்ப் பெருகி விட்டன. மாணவர்கள் மட்டுமின்றி சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும கணினியில் பயிற்சி பெற ஆர்வம் காட்டுகின்றன்ர். கணினியை இயக்கத் தெரிந்தாலே நல்ல வேலை கிடைக்குமென்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மென்பொருள் உருவாக்கத்தில் உலகிலேயே இந்தியா முன்னணி வகிக்கிற்து. அதில் தமிழ் நாட்டு இளைஞர்களின் பங்கு கணிசமானது. உலகின் அனைத்து முன்னணிக் கணினி