பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

access Storage device

40

acounting information


நினைவகத்தில் தரவுகள் கேட்கப்பட்டதிலிருந்து அவை எடுக்கப்பட்டு, பயன்படுத்த ஆகும் நேரம்.

access storage device, direct : நேரடி அணுகு களஞ்சியக்கருவி; நேரடி அணுகு சேமிப்பக சாதனம்.

access storage, direct : நேரடி அணுகு சேமிப்பகம் : அணுகு களஞ்சியம்.

access storage, random : தற்போக்கு அணுகு தேக்ககம்; குறிப்பின்றி அணுகு சேமிப்பகம்.

access storage, zero : சுழி அணுகு சேமிப்பகம்.

access time : அணுகு நேரம் : சேமிப்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட தரவைக் கண்டறிந்து, வெளியிட்டுக்கு வழங்குவதற்கான நேரம் அல்லது தரவு ஒன்றைச் சேமிப்பு இடத்தைக் கண்டறிந்து வழங்குவதற்கான நேரம்.

access to store : சேமிப்பக அணுகல்.

access vector : அணுகு நெறியம் : தேவையான தரவுகளைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு தரவு விவரம்.

account . கணக்குவைப்பு : 1. இணையத்தில், ஒரு பயனாளரை அடையாளம் காணவும், அவர் இணையத்தைப் பயன்படுத்தும் நேரத்தைக் கணக்கிடவும், இணையச்சேவை நிறுவனம் பராமரித்து வரும் கணக்கு வைப்பு. 2. குறும்பரப்பு பிணையங்களிலும், பல் பயனாளர் இயக்க முறைமைகளிலும், நிர்வாகம் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக, அனுமதிக்கப்பட்ட பயனாளர்களை அடையாளம் காணும் பொருட்டு, பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பேடு.

accountancy : கணக்கியல்

accountancy card calling : வங்கிக் கணக்கு அழைப்பு அட்டை

accounting file : கணக்கு வைப்புக் கோப்பு : ஒரு பிணைய அல்லது பல் பயனாளர் பணிச் சூழலில், ஓர் அச்சுப்பணி அச்சுப்பொறிக்கு அனுப்பப்படும்போது, அதை அனுப்பிய பயனாளர் பற்றிய விவரம் மற்றும் இதுவரை அச்சடிக்கப்பட்ட பக்கங்கள் பற்றிய விவரம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கோப்பு. இந்தக் கோப்பு அச்சுப் பொறி கட்டுப்படுத்தி (printer controller) யால் உருவாக்கப்படுகிறது.

accounting information system : கணக்கிடும் தகவல் அமைப்பு : ஒரு நிறுவனத்தின் பணம் கைமாறல் போன்ற வணிகப்