பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ActiveMovie

47

ActiveX controls


ActiveMovie : இயங்கும் திரைப்படம் : மேசைக் கணினி மற்றும் இணையத்தில் செயல்படுத்தும் பல்லூடகப் பயன்பாடுகளுக்காக, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கிய, பணித்தளம் சாரா இலக்கமுறை ஒளிக்காட்சி (Digital Video) தொழில் நுட்பம்.

active partition : இயங்கும் பாகம் : வன்பொருளில் மின் சக்தி வந்தவுடன் பயன்படுத்தப்படும் இயக்க முறைமையைக் கொண்ட நிலைவட்டின் பகுதி.

active programme : ந்டப்பு நிரல்;இயங்கும் செயல் நிரல் : நுண்செயலி தற்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிரல்.

active sensing : நடப்பு ஆணைத் தொடர்.

active star : இயங்கும் நட்சத்திரம் : வெளியிலுள்ள முனையங்கள் ஒரு தனி மைய முனையுடன் இணையும் ஒரு பிணையக் கட்டமைப்பு முறை.

active window : இயங்கும் சாளரம் : மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் தொகுப்பில் இயங்கும் திறந்த சாளரம்.

ActiveX : ஆக்டிவ்எக்ஸ் : வெவ்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்ட மென்பொருள் செயல் உறுப்புகள் (components) ஒரு பிணையப் பணிச் சூழலில், தமக்குள் உறவாடிக் கொள்ள வகைசெய்யும் தொழில்நுட்பங்களின் கூட்டுத் தொகுதி. 1990-களின் இடைப்பகுதியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இதனை உருவாக்கியது. மைக் ரோசாஃப்ட் நிறுவனத்தின் காம் (COM.-Component Object Model) தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இது உருவாக்கப் பட்டுள்ளது. தற்போது வைய விரிவலையில் பயனாளர் உறவாடும் பக்கங்களை வடிவமைக்க ஆக்டிவ்எக்ஸ் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. மேசைக் கணினிப் பயன்பாடுகளிலும், ஏனைய நிரலாக்கங்களிலும்கூடப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ActiveX controls : ஆக்டிவ் எக்ஸ் கட்டுப்பாடுகள்;ஆக்டிவ் எக்ஸ் இயக்குவிசைகள் : ஆக்டிவ்எக்ஸ் தொழில் நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்ட, மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய மென் பொருள் செயலுறுப்புகள். அசைவூட்டம் (animation), மீள்-எழு பட்டிகள்

(pop-up menus) போன்ற தனிச்சிறப்பான செயல்பாடுகளை வலைப்பக்கங் களிலும் மேசைப் பயன்பாடுகளிலும் உருவாக்குவதற்கு இச்