பக்கம்:கரிகால் வளவன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

மக்களும், செல்வர்களும் உள்ள இடம். சோழ நாட்டின் செல்வத்தைத் தன் தோற்றத்தால் புலப்படுத்திக் கொண்டு விளங்கியது அப்பகுதி.

இத்தகைய நகரம் இப்போது பொலிவற்று நிற்கிறது. மக்களுடைய முகத்தில் மலர்ச்சியைக் காணவில்லை. மன்னன் நோய்வாய்ப்பட்டிருப்பதுதான் காரணம். ஒவ்வொரு கணமும் மக்களுடைய கவலை மிகுதியாகிக் கொண்டே வந்தது. மன்னன் பிழைப்பான் என்ற நம்பிக்கை தளர்ந்து கொண்டு வந்ததே அதற்குக் காரணம்.

“இனிச் சோழநாடு என்ன கதியாவது?” என்ற கவலை சான்றோர்களின் உள்ளத்தில் சொல்லவொண்ணாத வேதனையை உண்டாக்கியது. என்ன என்னவோ யோசனை செய்தார்கள். மன்னனுடன் இருந்து அரசியலைக் கவனித்து வந்த அமைச்சர்களும், அவனுக்கு உறுதுணையாக இருந்த சான்றோர்களும், அறங்கூறவையத்தின் உறுப்பினர்களாகிய பெருமக்களும் கூடி ஆலோசித்தனர். மன்னன் இனிப் பிழைப்பது அரிது என்ற முடிவின்மேல் அவர்கள் ஆலோசனை படர்ந்தது. எவ்வளவு நேரம் கலந்து பேசியும் முடிவுக்கு வர இயலவில்லை. சோழ சிங்காதனத்துக்கு உரிமை கொண்டாடுவோர் பலர் இருந்தனர். அவர்களில் யார் என்ன செய்வார்களோ!

இத்தனை துயரச்சூழல்களுக்கிடையே ஒரே ஒரு சுடர்ப்பொறி அவர்களுடைய உள்ளத்துக்கு ஆறுதலைத் தந்தது. அரசியினுடைய தோழி ஒருத்தி வெளியிட்ட செய்தி ஒன்று, அவர்களுடைய கவலைக்கு மாற்றாக இருந்தது. அதை அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/10&oldid=1232452" இலிருந்து மீள்விக்கப்பட்டது