பக்கம்:கரிகால் வளவன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

பிறந்து வளர்ந்து நாட்டுக்கு நன்மை உண்டாக்க வேண்டுமே!’ என்று அவர் கவலைப்பட்டார். அவருக்குச் சோதிட நூலில் நல்ல பயிற்சி உண்டு. அந்தப் பயிற்சியினாலும், அநுபவத்தினாலும் தம் தங்கைக்கு மகன் பிறப்பான் என்றே அவர் நம்பினார். ஆனால் அந்த மகன் நாளும் கோளும் நல்ல நிலையில் இருக்கும்போது பிறந்தால்தானே அவருடைய நம்பிக்கை நிறைவேறும்? “கடவுளே! நல்ல வேளையில் குழந்தை பிறக்கவேண்டும்” என்று வேண்டினார்.

அரசிக்குப் பிரசவ காலம் நெருங்கியது. இரும்பிடர்த்தலையார் ஒவ்வொரு நாளும் பஞ்சாங்கத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார். கெட்ட வேளையில் குழந்தை பிறக்கக் கூடாதே என்ற பயம் அவருக்கு. எல்லா வேளையும் நல்லனவாகவா இருக்கும்? நல்லதும் பொல்லாததும் கலந்து கலந்து தானே வரும்?

அரசிக்குப் பிரசவ வேதனை உண்டாயிற்று. இரும்பிடர்த்தலையார் பஞ்சாங்கத்தை எடுத்து வைத்துக்கொண்டார். கிரகங்கள் எந்த எந்த நிலையில் இருக்கின்றன என்று பார்த்தார். ‘இன்னும் மூன்று நாழிகை வரையில் நல்ல காலம் இல்லை. அதற்குள் குழந்தை பிறந்தால் கதிமோட்சமே இல்லை!’ என்று தெரிந்தது. மூன்று நாழிகை கழித்துப் பிறந்தால் குழந்தை இராச யோகத்தோடு இருப்பான். பெரும் புகழை உடையவகை விளங்குவான். இளமையில் பல இன்னல்கள் வந்தாலும் பிறகு யாராலும் வெல்ல முடியாத நிலை பெறுவான், பல நாடுகள் அவனுக்கு உரிமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/14&oldid=1340562" இலிருந்து மீள்விக்கப்பட்டது