பக்கம்:கரிகால் வளவன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

கிறோம். சேரனுடைய துணை கிடைக்குமானால் வெற்றி கிடைப்பது உறுதி. அம் மன்னனிடம் சென்று நம் கருத்தைக் கூறலாம். நாமும் வருகிறோம். அம் மன்னன் துணைபுரிய உடன்பட்டால் அன்றே சோழ அரசன் ஒழிந்தான் என்று நிச்சயம் செய்து கொள்ளலாம்.”

பாண்டியன் யோசனை பலித்தது. சேரநாட்டை ஆண்டு வந்த பெருஞ்சேரலாதன் சோழ நாட்டின் மீது படையெடுக்க உதவுவதாக ஒப்புக்கொண்டான். அவனே தலைமை பூண்டு, போரை நடத்துவதாகக் கூறினான். பதினொரு வேளிரும் பழம் நழுவிப் பாலில் விழுந்தது என்று மகிழ்ச்சி கொண்டனர், பாண்டியனும் போருக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்யலானான்.

சோழ நாட்டின் மேல் சேரன் படையெடுத்திருக்கிறான் என்ற செய்தி எங்கும் பரவியது. சேரன் தன் நாட்டிலிருந்து படையெடுக்காமல் பாண்டி நாட்டின் வழியே படையைச் செலுத்தி, அந்த நாட்டுப் படையையும் வேளிர் படையையும் சேர்த்துக்கொண்டு தென் திசையிலிருந்து படையெடுத்தான். சோழ நாட்டின் தென்பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டு வடக்கு நோக்கிப் படையைச் செலுத்தினான். இப்படி ஒரு நிலை வரும் என்பதை முன்பே சிந்தித்திருந்த கரிகால் வளவன் ஏற்ற வகையில் படையைத் திரட்டியிருந்தான். அந்தப் படையுடன் பூம்புகாரிலிருந்து புறப்பட்டான். பகைப்படை காவிரிப்பூம்பட்டினத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/45&oldid=1232485" இலிருந்து மீள்விக்கப்பட்டது