பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

குட்டியிருக்க முடியும் ஒருகாலும் முடியாது. ஆகவே, அறிவுமன்றங்களும். கல்விக் கூடங்களுமே கழகம் என்னும் பெயர்க்கு உரியனவாம். இக்காலத்தில் உடற் பயிற்சியும் படைப்பயிற்சியும் கல்வித்திட்டத்தில் சேர்ந்திருப்பதைப் போல, அக்காலத்திலும் மற்போர்ப் பயிற்சியும் படைக்கலப் பயிற்சியும் இன்றியமையாதனவாய்க் கருதப்பட்டதால், அவை நடைபெற்ற இடங்களும் கழகம் என அழைக்கப்பட்டதில் வியப்பில்லை. ஆனால் சூதாடுகளத்திற்கு இந்தப் பெயர் வந்த வரலாறுயாதாக இருக்கலாம்? இதற்கும் பதில் இதோ கிடைத்துவிட்டது:

நிலை தடுமாற்றம்:

அறிவியல் கலை மன்றங்களில் ஒய்வு நேரங்களில் பொழுது போக்கிற்காகச் சூதாட்டம் நடந்திருக்கலாம். முதலில் பந்தயம் இன்றி ஆடியிருக்கலாம். பின்னர்ப் பணம் வைத்துப் பந்தயம் கட்டி ஆடியிருப்பர். இப்படியாகச் சில இடங்களில் நாளடைவில் அறிவியல் ஈடுபாட்டினைக் காட்டி அலும் சூதாட்டமே முதல் இடம் பெற்றுவிட்டிருக்கலாம். போகப் போகச் சில அறிவியல் மன்றங்கள் கலைந்து போக அல்லது கலைக்கப்பட, அந்த இடங்கள் முழுக்க முழுக்கச் சூதாடுங்களங்களாகவே மாறிவிட்டிருக்கலாம் (இன்றைய உலகிலும் இத்தகைய நிலையைச் சில இடங்களில் காணக் கூடும்). ஆனால் நிலைமை மாறியும், கழகம் என்னும் அந்தப் பழைய பெயர் மட்டும் அப்படியே ஆணி அடித்துக் கொண்டு-வேர் பாய்ந்து நிலைத்துவிட்டிருக்கலாம். அதனால்தான் திருவள்ளுவரின் திருக்குறளிலும் சூதாடும் இடம் கழகம் எனச் சுட்டப்பட்டுள்ளது. இந்தத் திருக்குறள் ஆட்சியைக் கொண்டு, கழகம் என்னும் சொல், சூதாடும் இடத்தை மட்டுந்தான் பண்டைக் காலத்தில் குறித்து வந்தது என்று முற்றுப்புள்ளி வைத்துவிடக்கூடாது. திருக்