பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

மேடைப் பேச்சுப் பகுதி

3. மக்கள் மனப்பாங்கில்
மேடைத் தமிழ்

தமிழை இயல் தமிழ், இசைத் தமிழ், கூத்துத் தமிழ், என மூவகையாக்கி முத்தமிழ்’ எனக் கூறல்மரபு. மேலும். இன் தமிழ், மென் தமிழ், தீந்தமிழ், தேன் தமிழ், செந்தமிழ், பைந்தமிழ், ஒண்டமிழ், வண்டமிழ், நற்றமிழ், கன்னித் தமிழ், தெய்வத் தமிழ், முதலிய பல்வேறு அடைமொழிகளுடன் தமிழை வழங்கி மகிழ்வதும் உண்டு. இம்மட்டுமா, கொடுந்தமிழ், கொச்சைத் தமிழ், கலப்புத் தமிழ் என்பனவும் உண்டு. இவற்றிடையே மேடைத் தமிழ்’ என்பது ஒன்றும் இப்போது இடம் பெற்றுள்ளது.

பேச்சுத் தமிழ், இலக்கியத் தமிழ் என்னும் பெயர்களை இங்கே மறந்து விட்டோமே! பேச்சுத் தமிழில் மேடைத் தமிழ் அடங்கும்; மேடைப் பேச்சு என்றே கூறுவார்களே! எழுத்துத் தமிழை இலக்கியத் தமிழில் அடக்கலாம். பேச்சுத் தமிழிலும் பல மாதிரிகள் உண்டு! எழுத்துத் தமிழிலும் பல விதங்கள் உண்டு. பேசுவது போலவே எழுதி வேண்டும்-அதாவது-கொச்சையாகப் பேசுவது போலவே எழுதவும் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்பவர்களையும் இங்கே மறப்பதற்கில்லை. நன் றாக எழுதுவது போலவே நன்றாகப் பேசவும் வேண்டும் என்பவர்கள் இவர்களைக் கவனித்துக் கொள்வார்கள்.

சிறப்பாகப் பேச்சுத் தமிழை எடுத்துக் கொள்ளின், ஒருவரே இடத்திற்கு ஏற்பப் பலவிதமாகப் பேசுவதைக்