பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

கேட்கலாம். வீட்டில் பேசுவது ஒரு நடை, வெளியில் பேசுவது வேறொரு நடை, வகுப்பில் பாடம் கற்பிக்கும் போது பேசுவது மற்றொரு நடை, மேடையில் சொற் பொழிவாற்றும்போது பேசுவது பிறிதொரு நடை, இவ்வாறு ஒருவரே பலவகையாகப் பேசுவது உண்டு; இத்தனை இடங்களிலும் ஒரே நடையில்-அதாவது-ஒரு சிறிது கொச்சை நடையில் பேசுபவரும் உளர்.

பேச்சுத் தமிழில் சிறந்தது மேடைத்தமிழ் ஆகும். பேச்சுத் தமிழ் விளைக்கும் பயன் அளப்பரியது. அது மக்கள் மனப்பாங்கில் ஆழ இடம் பெற்றுப் பயன் விளைக்கிறது.

"விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்"

என்பது வள்ளுவர் வாய்மொழி, ஞாலமே ( விரைந்து செயலாற்றும்படிப் பேசுவது என்றால், பெருங்கூட்டத்திடையே-பெரிய மேடையில் பேசுவது தானே! சோராமல் சொல்வன்மையுடன் மேடையில் பேசுபவனை எதிர்க்கத் துணியாமையும் மக்கள் மனப்பாங்காகும்.

"சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது"

என்பது வள்ளுவம். மேடைத் தமிழ் கவர்ச்சியாய் இருக்க வேண்டும் என்பது மக்கள் மனப்பான்மை; யாவரும் விரும் பிக் கேட்கும்படி மேடைத் தமிழ் அமைய வேண்டும் என்பதும் மக்கள் மனப்பான்மை, இதைத்தான்;

“கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்"

என்னும் குறளால் குறித்துப் போந்தார் வள்ளுவனார்.