பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

 குறைந்த தமிழ் நடையில் பேசுவதை மக்கள் மிகவும் விரும்பிக் கேட்குமாறு செய்வது மிகவும் எளிது. ஏறுவது கடினம்இறங்குவது ஒரு வகையில் எளிதல்லவா? பேச்சாளர் இலர், எப்படியாவது மக்களைச் சிரிக்கச் செய்து வயப்படுத்தித் தம் பிழைப்பை நடத்திக் கொண்டு போவதற்காக, பாமர மக்களின் அளவுக்குத் தாம் கீழ் இறங்கிச் சென்று தாழ்ந்த நடையில் பேசி வருகின்றனர். தம் செயலே சரி என்பதற்கு அன்னார் கூறும் காரணமாவது:- “இன்னும் மக்கள் நம் அளவுக்கு உயரவில்லை; எனவே, நம் நடையையே நாம் பின்பற்றின் நம்மை மக்கள் பின்பற்றமாட்டார்கள்; ஆதலின் மக்கள் அளவுக்கு இறங்கிச் சென்று நாம் பேசினால்தான், அவர்கட்குப் புரியும்" என்பது அவர்கள் கூறும் காரண் மாகும். சரி, தாழ்ந்து கிடக்கும் மக்கள் உயர்வது தான் எப்போது? அவர்களை யார் எப்போது எப்படி உயர்த்துவது? படிப்படியாகத் த்ரீழ்ந்து கொண்டே போக வேண்டியது தானா? அங்ஙன மெனில் தமிழின் தரம் என்னாவது?-இது எதிர் தரப்பினரின் கேள்வியாகும். இந்தச் சிக்கலுக்குத் திர்வுதான் யாது?

மேடைத் தமிழ் என்பது, தனியே அமர்ந்து எழுதும் எழுத்தாளனது எழுத்துத் தமிழ் போன்றதன்று. வீட்டிலோ -வெளியிலோ ஒரு சிலரோடு மட்டும் உரையாடும் சுருங்கிய வட்டப் பேச்சும் அன்று. அல்லது, மக்களையே பார்க்காமல், தனி அறையில் அமர்ந்து பேசும் வானொலிப் பேச்சும் அன்று. மாறாக, மக்கள் பன்னூற்றுவரை அல்லது பல்லாயிரவரை எதிரும் விழியுமாக வைத்துக் கொண்டு பேசும் உயிர்ப்புள்ள-உணர்ச்சி மிக்கபேச்சே மேடைத் தமிழ் எனப்படுவது. எழுத்துத் தமிழினும் பேச்சுத் தமிழே உயிர்ப்பு உடையது என்பதை வலியுறுத்த வேண்டியதில்லை. எழுத்துத் தமிழினும் பேச்சுத்தமிழ் விரைந்து மாறக் கூடியது.