பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46


இந்தக் கதையிலிருந்து நாம் அறியக்கூடிய கருத்தாவது:- 'திருக்குறள் திருவள்ளுவர் என்னும் ஒருவராலே இயற்றப்பட்டது போல், நாலடியார் ஒருவராலேயே இயற்றப்படவில்லை; பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பே நாலடியார்’ என்பதாகும். நாலடியார், பதுமனார் என்னும் புலவரால் தொகுக்கப்பட்டதாகச் சொல்லப் படுகிறது. எனவே, நாலடியார் ஒரு தொகைநூல் என்பது போதரும்.

புதுக் கொள்கை:

பலர் பாடல்களின் தொகுப்பு நாலடியார் என்னும் கருத்து இதுகாறும் கூறப்பட்டு வந்தது. இப்போது ஒரு புதுக்கருத்து புகலப்படுகிறது. அதாவது,-நர்லடியார் பலர் பாடல்களின் தொகுப்பு அன்று; நக்கீரர் என்னும் ஒரே புலவரால் இயற்றப்பெற்ற நூலே நாலடியார்:இந்த உண்மை யாப்பருங்கல விருத்தி உரையிலிருந்து அறியப்பட்டுள்ளது-என்பதே அந்தப் புதுக்கருத்தாகும்.

யாப்பருங்கல விருத்தியுரையால் கிடைக்கும் குறிப்பு தவறாகவும் இருக்கலாம். பொதுவாக நாலடியாரின் அமைப்பினை நோக்குங்கால், நானுாறு பாடல்களும் ஒரு வராலேயே பாடப்பட்டவையாகத் தோன்ற வில்லை. சில கருத்துகள் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டுள்ளன. சில கருத்துகள் ஒன்றுக்கொன்று முரணாயுள்ளன. திருக்குறளில் ஒவ்வொரு தலைப்பையும் சேர்ந்த பத்துப் பத்துப் பாடல்களும் அந்தந்தத் தலைப்போடு, பொருந்தியுள்ளன. ஆனால், நாலடியார் முழுவதையும் கூர்ந்து நோக்கின், சில பாடல்கள் தலைப்போடு பொருந்தாதிருப்பதை அறியலாம். இதிலிருந்து தெரிதலாவது;- நானூறு உதிரிப் பாடல்களைப் பத்துப் பத்துப் பாடல்கள் வீதம் எப்படி