பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

யாவது நாற்பது தலைப்புகளில் அடக்கிவிட வேண்டும் என ஒருவர் திட்டமிட்டுச் செய்து தொகுத்தமத்துள்ளார்-என்பதுதான். அறிஞர்கள் மிகவும் ஆராய வேண்டிய செய்தி இது.

ஏன், யாப்பருங்கல விருத்தியுரைப் பகுதியையே சிறிது ஆராய்ந்து பார்ப்போமே! யாப்பருங்கல் விருத்தியுரையின் பவானந்தம் பிள்ளை பதிப்பில், செய்யுளியலிலுள்ள 'செப்பல் இசையன வெண்பா’ என்னும் (4ஆம்) நூற்பாவின் உரையிடையே, சில வெண்பாக்கள் எடுத்துக் காட்டுகளாகத் தரப்பட்டுள்ளன. இறுதி வெண்பா அரக் காம்பல் நாறும் வாய்’ என்னும் நாலடியார்ப் (396) பாடலாகும். இதன் கீழே பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

‘இன்னவை பிறவும் நக்கீரர் நாலடி நானூற்றில் வண்ணத்தால் வருவனவும் எல்லாம் துங்கிசைச் செப்ப லோசை, பிறவும் அன்ன’-

இந்தப் பகுதியில், 'நக்கீரர் நாலடி நானுாறு’ என்றிருப்பதைக் கொண்டு, நானுாறு பாடல் கொண்ட நாலடியாரை நக்கீரர் இயற்றினார் என்று ஒருசாரார் கூறுகின்றறனர். இந்த உரைப் பகுதியை ஊன்றி நோக்கவேண்டும். ‘இன்னவை பிறவும்' என்னும் தொடர் மேலே உள்ள நாலடியார்ப் பாடல் முதலியவற்றைக் குறிக்கிறதெனவும்’ 'நக்கீரர் நாலடி நானுாற்றில் வண்ணத்தால் வருவனவும், என்னும் தொடர், மேலேயுள்ள நாலடியார்ப் பாடல் முதலியவற்றைக் குறிக்காமல், வேறு ஏதோ ஒரு நூற் பாடலைக் குறிக்கிறதெனவும் உய்த்துணரலாம்.

இந்த உரைப் பகுதியே கூட, தமிழக அரசின் கீழைக் கலை ஒலைச் சுவடி நூலக நிறுவனத்தால் (Government