பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நூல் முகம்

'கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி' என்ற இச்சிறு நூல் புலவர்க்கே உரியது என்று பொதுமக்கள் மருள வேண்டாம். பொதுமக்களுக் கென்றே எண்ணி எழுதப்பெற்றது இது. பொதுமக்களும் இலக்கியங்களைத் திறனாயும் நோக்குடன் படிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அம்முறையில் இந்நூல் வழிகாட்டியாக அமையுமானல், அதுவே யான் பெற்ற பேறு; எனது முயற்சியின் பயன்.

இந்நூலில் ஒன்பது கட்டுரைகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஆறு, நூலை ஆறு வித கோணத்திலிருந்து பார்ப்பவை; நூல் முழுவதும் செல்லக்கூடிய பார்வைகள் அவை. கற்களாலும் சுண்ணத்தாலும் எழுப்பிய மாளிகையைப் பலவித கண்ணோட்டத்தால் பார்ப்பதுபோல சொற்களாலும் சுவைப் பொருள்களாலும் எழுப்பப் பெற்ற காவிய மாளிகையைப் பல்வேறு நிலையிலிருந்து நோக்கி அனுபவித்தேன். இப்பார்வைகள் மூல நூலைப் படித்துச் சுவைக்க விரும்புவார்க்கு ஓரளவு துணையாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

இந்நூலை எங்கள் கணேசன் அவர்கட்குச் சமர்ப்பணம் செய்துள்ளேன். திரு. கணேசன் அவர்கள் புலவர்கட்குப் புலவர் ; தலைவர்கட்குத் தலைவர் ; தொண்டர்கட்குத் தொண்டர். அவர் அலாதி மனிதர். அனைத்தையும் அப்பர் பெருமானுக்கே அர்ப்பணம் செய்து வாழ்வைத்