பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தென்தமிழ் தெய்வப் பரணி

15


போய்ப் புதிதாகச் சொன்ன யாப்பின் மேலது என்ற வாறு...புதிதாகப் புனைதலாவது ஒருவன் சொன்ன நிழல்வழி யன்றித் தானே தோற்றுவித்தல்" என்று இதற்கு விளக்கம் தருகிறார். பேராசிரியர்," விருந்து தானும் புதிதாகப் பாடும் தொடர்நிலை மேற்று " என்று உரை கூறி சில பிரபந்தங்களை மேற்கோள் காட்டியுள்ளார். நச்சினர்க்கினியரும் அவ்வாறே சில பிரபந்தங்களை உதாரணங்களாகக் காட்டுகின்றார். எனவே, இப் பொது விதியே பல புதிய பிரபந்தங்கட்கு இடனாக அமைந்துள்ளது என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை.

கலிங்கத்துப் பரணிபற்றிய வரலாறு

"கலிங்கத்துப் பரணி" என்னும் நூல் அக் காலத்துப் பேரரசனாகத் திகழ்ந்த முதற் குலோத்துங்கன் தன் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான் என்பவனைக் கொண்டு கலிங்க நாட்டின் மீது போர் தொடுத்து வென்ற செய்தியைக் கூறுவது. கலிங்கப் போர் நிகழ்ந்த ஒரு சில நாட்கள் கழித்து அரசவையில் குலோத்துங்கனும் அவன் அவைப் புலவராகிய சயங்கொண்டாரும் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அரசன் வேடிக்கையாக, 'புலவர் அவர்களே, கலிங்க நாட்டைச் சயங்கொண்டமையால் யானும் தங்களைப்போல் சயங்கொண்டான் ஆயினேன்' என்று கூறினான். அதனைக் கேட்ட புலவர் அங்ஙனமாயின், சயங்கொண்டானைச் சயங்கொண்டான் பாடுதல் சாலப் பொருத்தமாகும் என்று மாற்றம் உரைத்து கலிங்கத்துப் பரணியைப் பாடி முடித்ததாக ஒரு வரலாறு வழங்கி வருகிறது. நூல் அரங்கேற்றப் படுங்கால் அந்நூலின் சொற்