பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


களைப் பலபடியாகவும் அசதியாடிக் கூறித் துயிலுணர்த்தும் உரிமை தாமே அவரே என்ற வேற்று மையின்றிப் பழகும் தோழியர்க்கன்றி அவர்களுடன் அங்ஙனம் பழக வாய்ப்பே இராத ஆடவர்க்கு யாங்ஙனம் இயலும்?

இரண்டாவது கருத்துதான் மிகவும் பொருத்த முடையது; கொள்ளக்கூடியது. அது திருப்பாவை, திருவெம்பாவைகளின் அடிப்படைக் கருத்துக்களை யொட்டியுமிருக்கின்றது. கோகுலத்திலுள்ள ஆய்ச்சியர் கண்ணபிரானின் பேர்பாடி மகிழ்வதற்குத் தம் தோழியரின் முன்றிலிற் சென்று அழைப்பதை,

"நாயகப் பெண்பிள்ளாய்
நாரா யணன் மூர்த்தி
கேசவனப் பாடவும்நீ
கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்!
திற[1]

என்றும்,

"பந்தார் விரலி நின்
மைத்துனன் பேர்பாட
செந்தா மரைக்கையால்
சீரார் வளையொலிப்பு
வந்து திறவாய்'[2]

என்றும் அழைப்பதாக ஆண்டாள் கூறுகிறார், திருவெம்பாவையிலும் சிவபெருமானின் புகழ் பாடுமாறு திருவண்ணாமலையிலுள்ள மகளிர் ஒருவரை


  1. திருப்-7
  2. திருப்-18