பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


அகன்றும் கொழுவைப்போல் நீண்டும் இருக்கின்றன. அவற்றின் உதடுகள் மிகவும் தடித்து நீண்டு மார்பளவும் தொங்குகின்றன. பாம்புகளில் ஓந்திகளைக் கோத்துத் தாலிகளாக அணிந்திருக்கின்றன. இந்த வடிவங்களுடன் உள்ள பேய்கள் வானை எட்டும் உயரமாக உள்ளன.

மூங்கில்களுக்கும் பேய்களுக்கும் வேறுபாடு புலப்படவில்லை; பேய்களின் குழந்தைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் வேற்றுமை தெரியவில்லை.

அட்ட மிட்டநெ டுங்கழை காணிலென்
அன்னே யன்னையென் றாலுங்கு ழவிய;
ஒட்ட வொட்டகங் காணிலென் பிள்ளையை
ஒக்கு மொக்குமென் றொக்கலை கொள்வன.[1]

[அட்டம்-அண்மை; ஆலும்-ஒலியிடும்; குழவி-பேயின் குழந்தை; ஒட்ட-அண்மையில் ஒக்கலை-இடுப்பு]

உயர்ந்த மூங்கில்களைக் காணுங்கால் பேய்க்குழவிகள் 'அம்மா, அம்மா’ என்று கூப்பிட்டுக்கொண்டு செல்லுமாம்; ஒட்டகங்கள் தம்மை நெருங்கி வருங்கால் தாய்ப்பேய்கள் அவற்றைத் தம் இடுப்பில் தூக்கிவைத்துக்கொள்ளுமாம்.

பேய்கள் இருக்கும் காடு

பாலை நிலந்தான் பேய்களின் இருப்பிடம், சங்க இலக்கியங்கள் காட்டுகின்றனவே அது போன்ற காடுதான். எங்கும் ஒரே மணற்பரப்பு. ஒரு மணலைக் கடலிலிட்டாலும் அதன் நீரெல்லாம் சுவறிப் போகும். இத்தகைய மணல் இருப்பது தெரியாமல்


  1. தாழிசை-142