பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல்- 1

கல்விஉளவியலின் இயல்பும் அளவும்


கல்விஉளவியல் கோட்பாடுகள் என்னுந் தொடரில் கல்வியாவது எதனைக் குறிக்கின்றது? உளவியல் எதனை உணர்த்து கின்றது? கோட்பாடுகள் யாவை? என்பவற்றை ஆராய்தல் வேண்டும்.

முதலில், கல்வியைப்பற்றிச் சிறிது ஆராய்வோம். ஒரு காலத்தில், கற்பித்தல் மட்டுமே கல்வி என்றும், படிப்பு, எழுத்து, கணிதம் ஆகிய மூன்றையும் குடிமையைப்பற்றிய சில உண்மைகளையும் பயிற்றுவித்தலே கல்வி என்றும் கருதினர். இது முற்றிலும் சரி என்று சொல்ல முடியாது. அடிப்படைப் பாடங்களில் பயிற்சி பெறுதல் மட்டும் கல்வியன்று; அஃதுே அதனிலும் சாலப்பெரிது. அன்றியும், நீண்டகாலமாக, கல்வியில் மாணாக்கன் தான் கண்ட அறிவையும் மனப்பான்மைகளையும் எப்படியாவது உட்கொள்வதாகவும், கல்வி அவனுக்குள் ஊற்றப் பெறுவதாகவும் கருதப்பெற்றது. மாணாக்கனின் உள்ளம் ஒரு வெற்றிடமாகவும், அதை ஆசிரியர் அறிவுத்துணுக்குகளால் நிரப்புவதாகவும் கொள்ளப்பெற்றது. கல்வி என்பது நாம் ஒருவனுக்கு ஊற்றக்கூடிய பொருளன்று; ஊட்டக்கூடிய பொருளுமன்று. அஃதை அவனே அடைதல் வேண்டும்.

இன்றைய கல்வி ஆராய்ச்சிகளும், மக்களைப்பற்றிப் பிற துறைகளால் அறிந்தனவும் கல்வியானது மக்களின் நடத்தையை மாற்றும் ஒரு செய்முறை என்று காட்டுகின்றன. கல்வியில் மூன்று அடிப்படைக் கூறுகள் உள. அவை: தனியாள்,[1] அவன் வாழும் சூழ்நிலை,[2] தனியாளுக்கும் சூழ்நிலைக்கும் இடையில் நிகழ்கின்ற இடைவினை[3]. மனிதனின் பிறப்புமுதல் இறப்பு


க.உ.கோ-1

  1. 1. தனியாள்-Individual
  2. 2. வாழும் சூழ்நிலை
  3. 3. இடைவினை-interaction