பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வி உளவியலின் இயல்பும் அளவும்

3


உளவி. அது நம் அநுபவங்களையும் செயல்களையும் பிற வற்றையும் முறைப்படுத்திக் கோவை செய்து வெளியிடுகின்றது.

உளவியலும் ஓர் அறிவியலே


முதலில் அறிவியல் [1]இன்னது என்பதை வரையறை செய்து கொள்வோம். அறிவியல் என்பது ஒர் ஒழுங்கான முறையில், ஒருங்கமைந்த- நன்கு சோதிக்கப்பெற்ற - செய்திகளின் தொகுப்பு. அஃது ஒரு குறிப்பிட்ட துறையையோ அல்லது ஒரு சிலவகைத் தகவல்களையோ நிகழ்ச்சிகளையோபற்றி விரித்து உரைக்கும். எடுத்துக்காட்டாக- இயற்பியல் [2]ஆற்றலைப் பற்றி, அஃதாவது வெப்பம், ஒளி, ஒலி, மின்னாற்றல் போன்ற வற்றின் சில மெய்ம்மைகளைப்பற்றி எடுத்துரைக்கின்றது; வேதியியல்[3] சடப்பொருளைப்பற்றி, அஃதாவது சடப்பொருள்கள் எவ்வாறு ஒருங்கிணைந்தன, அவை எவ்வாறு பிரிகின்றன என்பதைப்பற்றிப் பேசுகின்றது; உயிரியியல்[4] உயிருள்ள பொருள்களைப் பற்றிக் கூறுகின்றது: அஃதாவது தாவரங்கள், பிராணிகள் எவ்வாறு வளர்ந்து துலக்கமுறுகின்றன என்பதைக் கூறுகின்றது; உளவியல்[5]' என்பது உயிரிகளின் மனச் செயல்களை வரையறுத்துக் கூறுவது; அஃதாவது நடத்தையை எடுத்துரைப்பது. இன்னும் விளக்கமாகக் கூறினால் மக்களின் எண்ணங்கள், உணர்ச்சிகள், செயல்கள் ஆகியவற்றை விளங்க உரைப்பது உளவியலாகும். ஆகலின், ஒவ்வோர் அறிவியல் துறையும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்ட மெய்ம்மைகளின் தொகுதியை விளக்குகின்றது.

ஒவ்வொரு துறையைச் சார்ந்த பொருள் அல்லது மெய்ம் மைகளின் தொகுப்பு ஒரு கட்டுப்பாட்டினுள் அடங்கிய உற்று நோக்கலால் சிறப்பான முறையில் பயிற்சி பெற்றவர்களால் திரட்டப்பெற்றது; அவர்கள்தாம் அறிவியல் அறிஞர்கள். எனவே, இப்பொருள் கற்பனையாலும் சித்தனையாலும் மட்டிலும் திரட்டப்பெற்றது அன்று என்பதாகின்றது. ஒவ்வொரு துறையிலுமுள்ள செய்திகள் வரையறுக்கப்பெற்ற செய்முறை [6]களினால் திரட்டப்பெறுகின்றன. இச் செய்முறைகளைத்


  1. 6.அறிவியல் -Science.
  2. 7.இயற்பியல் -Physics.
  3. 8.வேதியியல் -Chemistry.
  4. 9.உயிரியியல் -Biology.
  5. 10.உளவியல்-Psychology.
  6. 11,செய்முறை -Procedure.