பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வி உளவியலின் இயல்பும் அளவும்

7


மக்கள் கற்கக்கூடும்; கற்கத்தான் செய்கின்றனர். எனினும், ஒழுங்காகவும் பயனுடனும் கற்க உளவியல் அறிவு வேண்டும்.

கல்வி உளவியல் இன்று குழந்தை உளவியல், குமரப்பருவ உளவியல், மனநலத்துறை, சமூக உளவியல் ஆகிய துறைகளினின்றும் பல தகவல்களைப் பெறுகின்றது. அன்றியும், அது [1],மருத்துவத்துறை,[2], உயிரியல்,[3], போன்ற துறைகளின்றும் தனக்குப் பொருத்தமான தகவல்களைப் பெறுகின்றது.

பொது உளவியலோடு வைத்து ஒப்பிட்டால், கல்வி உளவியல் அண்மையில் தோன்றியது என்பது தெளிவாகும். மக்கள் ஆதியிலிருந்தே ஒருவரையொருவர் கவனிக்கும் திறனுடையராயிருந்தனராதலின், உளவியலும் மிகத்தொன்மை வாய்ந்தது. ஆனால் கி.பி.1879 இல் [4], லீப்ஸிக் பல்கலைக்கழகத்தில் உளவியல் ஆராய்ச்சி நிலையத்தைத் தொடங்கிய நாள்தொட்டு இக்கலைக்கு அறிவியல் சிறப்புக்கிடைத்தது. ஆனால், கல்வி உளவியல் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து தான் அறிவியல் நிலையை அடைந்தது.

உளவியலின் நோக்கங்கள்

மக்கள், விலங்குகள் ஆகியவற்றின் செயல்களைப் பற்றிய விரங்களை ஒழுங்காகவும் திட்டமாகவும் முற்றிலும் வரையறுத்து விளக்க முயல்வது உளவியல். அதன் நோக்கங்கள் யாவை?

நம்முடைய நடத்தையை அறிந்து அதன்மேல் ஆட்சி கொள்வது ஒன்று; பிறருடைய நடத்தையை அறிந்து அதன் மேல் ஆட்சி கொள்வது மற்றொன்று; நம்முடைய நடத்தையையும் பிறருடைய நடத்தையையும் அவற்றின் பொருட்டே அறிதல் இன்னொன்று; மக்களின் இயல்பை அறிந்ததன் மூலம் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது பிறிதொன்று; உளவியலறிஞனுக்கு மனிதன் எவ்வாறு தோன்றுகின்றான் என்பதை அறிவது வேறொன்று; பயிற்றலில் ஆசிரியருக்கு மிகவும்


  1. சமுக மனிதவியல்-Social anthropology
  2. உள்நோய் மருத்துவத்துறை-Psychiatry
  3. சமுகவியல்-Sociology
  4. வில்ஹெம்வுண்ட்-Wilhelm Wundt