பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

கல்வி உளவியல் கோட்பாடுகள்


பினும், அவருடைய கவனம் முழுவதும் ஒவ்வொருவரும் இணையற்ற தனியாட்கள் என்பதில் இருக்கவேண்டும். அவர்களைப் பொறித்தன்மையுள்ள குழுக்கள் என்று கருதாது உயிருள்ள ஒரு குழுவின் உறுப்பினர்கள் எனக் கருதுதல்வேண்டும். ஒவ்வொரு வரும் ஒரே வகையில் ஒருவராக இருப்பினும், அவ் வகுப்பிலுள்ள ஏனையோரிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர். ஆசிரியர் இத் தனியாள் வேறுபாடுகளைத் தெரிந்து அவ்வகுப்பினைத் தனித் தனியாகக் கையாளுங்கால் அவ்வேறுபாடுகளுக்குத் தக்க மதிப்பு கொடுத்தல் வேண்டும். ஆடுகளம், உணவு விடுதி, வகுப்பறை ஆகிய இடங்களில் தனியாளாகக் கவனிக்கலாம்; சுற்றுலாச் செல்லும்போது இதற்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். குழந்தையின் இயல்பு யாது? அவனுடைய இயற்கைப் பண்புகள், ஆற்றல்கள் யாவை? குழந்தையின் வளர்ச்சிக் கோலங்கள் யாவை? ஆளுமை எங்ங்னம் வளர்கின்றது? சமூக உணர்ச்சி எப்பொழுது தோன்றுகின்றது? அதை எங்கனம் வளர்க்கலாம்: என்பன போன்ற வினாக்கட்கு விடை காண்பதால் மாணாக்கர்களைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளலாம்.

இரண்டாவது : மாணாக்கர்களைப் பற்றிய அறிவு ஆசிரியருக்கு அவர்கள் மீது தனிப்பட்ட செல்வாக்குத் தருதல். அவர்களை நினைவில் வைத்திருந்து பெயர் கொண்டு அழைத்து, தன்னம்பிக்கையுடன் அவர்களை ஆசிரியர் அணுகலாம். உற்சாகமும் நேர்த் தொடர்பும் கொண்டால், அவர்களை -நன்னிலையில் உருவாக்கலாம், அறிவே ஆற்றல்". மாணாக்கரின் மனங்களைப்பற்றிய அறிவு கல்விப் பயன்களை எய்தும் முறையில் கொண்டு செலுத்தத் தக்க ஆற்றலைத் தருக்கின்றது. மேலும், உளம் எவ்வாறு கற்கின்றது என்பதை வருணிக்கின்றது; ஆசிரியர், கற்றவில் அவ்வுள்ளங்களுக்குத் துணையாக இருக்கலாம். பழக்கங்களும் பற்றுகளும்' எவ்வாறு உண்டாகின்றன என்பதை உளவியல் உணர்த்துகின்றது. நற்பழக்கங்களும் விரும்பத்தக்க பற்றுகளும் உண்டாக ஆசிரியர் துணை செய்யலாம். உற்று நோக்கல் திறன்களும், படைப்புக் கற்பனையும் எங்கனம் வளர்கின்றன என்பதை விளக்குகின்றது; இத்திறன் வளர்ச்சியில் ஆசிரியர் துணை செய்வது அவருடைய பொறுப்பாகின்றது. எனவே, உளவியல் அறிவால் மாணாக்கர்களிடம் ஆசிரியரின் செல்வாக்கு அதிகமாகின்றது; பயிற்றும் பொருளையும் பயிற்றும் முறைகளையும் ஒரு கட்டுப்பாட்டிற்குள்


38. ஆளூமை-Personality.

39. பழக்கங்கள்.Habits.

40.பற்றுக்கள்-Sentiments,