பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

கல்வி உளவியல் கோட்பாடுகள்


தொடங்கும் பருவம், நற்பழக்கங்களை ஏற்படுத்தவும் தீய பழக்கங்களை ஒழிக்கவும் ஆன முறைகள், திறன்களை வளர்க்கும் முறைகள், பற்றுகள் உண்டாகும் விதம் போன்ற பல பிரச்சினைகளைக் கல்வி உளவியல் ஆராய்கின்றது. மேலும், பயிற்றல் கற்றல் முறைகள், உத்திகள், வழிவகைகள், திட்டங்கள் முதலியவற்றைக் கல்வி உளவியலின் துணையால்தான் நாம் பெறுகின்றோம். குழந்தைகள் சூழ்நிலைக்குப் பொருத்தமுறுவதையும் ஆசிரியர்கள் பள்ளிச் சூழ்நிலைக்குப் பொருத்தமுறுவதையும் கல்வி உளவியல் எளிதாக்கிப் பயனுடையதாகவும் ஆக்குகின்றது.

உளவியலும் உடலியலும்: உளவியல் முழு மனிதனின் செயல்களைக் கூறுகின்றது. உடலியல்[1] உடலில் பல உறுப்புகளின் அமைப்பையும் அவற்றின் செயல்களையும் எடுத்தியம்புகின்றது. எனினும், உடலும் உள்ளமும் நெருங்கிய தொடர்புடையவை; இவ்விரண்டையும்பற்றிக் கூறும் தொழில்களை முற்றிலும் பிரிக்க இயலாது. பொதுவாகக் கூறுமிடத்து, உடல் உறுப்பு களின் வேலையாகிய செரிமானம், குருதியோட்டம் போன்ற வற்றை உடலியல் விளக்குகின்றது. உள்ளத்தின் செயல்களாகிய சிந்தனை, நினைவு, உணர்ச்சி, முயற்சி போன்றவற்றை உளவியல் உரைக்கின்றது. எனினும், ஒவ்வோர் இயக்கத்திற்கும் உடற் கூறும் உண்டு; உளக்கூறும் உண்டு. எடுத்துக்காட்டாகப் பேச்சை நோக்குவோம். பேச்சு நாவினுடையவும் மூளை யினுடையவுமான இயக்கங்களைப் பொறுத்தது. ஆனால், பேசக் கற்றல் உள்ளத்தின் வளர்ச்சியுடன் தொடர்புடையது. செரிமானம் உடலுப்புகளின் செயலாயினும், அது சினத்தால் கெடுகின்றது. அதுபோலவே, மனமகிழ்ச்சி செரிமானத்தை விரைவாக்குகின்றது. பொறிகளின் அமைப்பும் இயக்கமும் உடலியலிலும், அவை வளரும் வழிகள் உளவியலிலும் விளக்கப் பெறுகின்றன,

உளவியலும் உயிரியலும்: உயிரியல்[2] உயிரிகளைப்பற்றிய நூலாகும். உளவியல் உள்ளத்தைப்பற்றியது. உயிரியல் நன்றாக வளர்ந்த ஒர் அறிவியல் துறை. அது உடலியல், பிராணியியல், கால்வழி இயல்[3] போன்ற துறைகளைக் கொண்டது. 1859-ஆம் ஆண்டில் டார்வின் இனங்களின் தோற்றம் என்ற நூலை வெளியிட்டார். இதன்மூலம் காரிய

  1. 62. உடலியல்-Physiology.
  2. 63. உயிரியல்-Biology.
  3. 64. கால்வழி இயல்.Genetics.