பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வி உளவியலின் இயல்பும் அளவும்

25


சித்திவிதி, ஆயத்தவிதி, தேர்தல் நன்மைகள், இயல் பூக்கங்கள் முதலிய உளவியற் கருத்துகள் தோன்றின. உயிரியல் முறைகள் மூலம் ஆய்வகச் சோதனைகளும் பிராணி உளவியற் கல்வியும் வளர்ந்தன. பிராணி உளவியற் கல்வியின் ஓங்கிய வளர்ச்சி, உளவியலுக்கும் கல்வியியலுக்கும் பெரிதும் பயன்பட்டுளது.

உளவியலும் சமூகவியலும்: உளவியல் தனியாளின் செயல்களi விளக்குவது; சமூகவியல்[1] குழுக்களின் செயல்களை எடுத்துரைப்பது. சமூகவியல் சமூகங்கள், நிலையங்கள், சடங்குகள், பழக்க வழக்கங்கள், பண்பாடு, நாகரிகம் போன்றவற்றைக் கூறுகின்றது. உளவியல் சமூகங்களின் உறுப்பினர்களின் செயல்களை ஆராய்கின்றது, சுருங்கக் கூறின், சமூகவியல் குழுவினரின் உள்ளம் இயங்குவதையும், உளவியல் தனியாளின் உள்ளம் செயற்படுவதையும் ஆராய்கின்றன. ஒர் எடுத்துக் காட்டால் இதனை விளக்குவோம் சட்டசபைத் தேர்தலில் ஒரு கூட்டத்தார் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் தத்துவத்தைச் சமூக வியல் தெரிவிக்கின்றது. ஆனால், இதையறிய வாக்காளர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் அறிய வேண்டியுள்ளது. இதை உள வியல் கூறுகின்றது.

சமூகவியல் புதிதாயினும், அதன் கண் அதிக ஆராய்ச்சி நடை பெற்று வருகின்றது. இதன் மூலமாகப் பல பள்ளிப் பிரச்சினைகள் தீர்க்கப்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, நல்ல முறைகளையும் சாதனங்களையும் பயன்படுத்திய பின்னரும் சில குழந்தைகள் நன்முறையில் படிக்கக் கற்பதில்லை. இதற்குக் காரணம் திற்மைக் குறைவு மட்டுமன்று; பெரும்பாலும் அவர்கள் பள்ளி வாழ்க்கைக்கியைய நடந்துகொள்ளாததாலும் இக்குறைகள் நேரிடுகின்றன. அங்ங்னமே பள்ளிக்கு வெளியே மாணாக்கனுக்குச் சமூகத்தில் ஒரு மதிப்பு இல்லாததாலும் அவன் படிக்கத் தவறுகின்றான்.

கல்விக்கும் சமூகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே, உளவியல் சமூகவாழ்விற்குப் பயன்படுதலில் கல்விக்கும் ஒரு பெருந்தொண்டு இயற்றியதுபோலாகின்றது. இன்று ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகளில் உளவியலும் சமூகவியலும் இணைத்துக் கற்பிக்கப்பெறுகின்றன.


  1. 65. சமூகவியல்-Sociology