பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

கல்வி உளவியல் கோட்பாடுகள்


அதுபவங்களை உறுதியாகப் பெறவும் எண்ணுகின்றது. இங்ஙனமே பள்ளியாட்சியும், பயிற்றும் முறைகளும் வசதியான சூழ்நிலை, பரிவுடையவழி, தூண்டவல்ல தொடர்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் கற்றல் அநுபவங்களை அமைத்துத் தர வழிகோலவேண்டும்; காலக்குறைவிலும் முயற்சிச்சிக்கனத்திலும் தக்க பொருத்துப்பாடுகள் அமைதல் வேண்டும்.

பொறுத்தமுறுதலின் செயற்படும் உறுப்புகள்

ஒரு குழந்தையின் செயலையறிய வேண்டுமாயின் அதன் அமைப்பை நன்கு உணரவேண்டும். குழந்தையின் உடலில் தனிப்பட்ட பலகோடி உயிரணுக்கள் உள. உயிரணு[1] என்பது உடலிலுள்ள மிகச்சிறிய உயிருள்ள பகுதியாகும். உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறுவிதமான உயிரணுக்கள் உள்ளன. ஒரே விதமான பண்புகளைக் கொண்டு ஒரே மாதிரி யாகச் செயற்படும் உயிரணுக்கள் சேர்ந்து ஓர் உயிரணுத் தொகுப்பு ஆகின்றது. இத்தொகுப்பினை இழையம்[2] அல்லது திசு என்று வழங்குவர். பல இழையங்கள் ஒருங்கு கூடிக் குறிப் பிட்ட ஒரு தொழிலை இயற்றுகின்றன. இழையத் தொகுதியை உறுப்பு[3] என்பர். எடுத்துக்காட்டாக- உடலிலுள்ள இதயம் ஒர் உறுப்பு. கல்லீரல் மற்றோர் உறுப்பு. பண்புகளால் ஒன்றோடொன்று தொடர்புள்ள உறுப்புகளின் தொகுதி மண்டலம்[4] எனப்படும். (எ-டு) மூச்சுறுப்பு மண்டலம், நரம்பு மண்டலம், தசை மண்டலம். இம் மண்டலங்கள் உடலின் முக்கிய செயல் ஒன்றிற்கு அடிப்படையாக இருக்கக் கூடியவை. மனிதன் இம்மாதிரியான தொடர்புடைய பல மண்டலங்களையுடையவன்.

மானிட உறுப்புகளின் பாகுபாடு: மானிட உறுப்புகளை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று, நிலைநிறுத்தும் உறுப்புகள்[5]. இவை உடலினுள் செயற்பட்டுத் தனி யாளின் உடல்நலம், வளர்ச்சி ஆகியவற்றை நிலைநிறுத்து கின்றன. சுவாசித்தல், கழிவுப் பொருள்களை அகற்றுதல், செரிமானம் ஆதல் இவை போன்ற செயல்களை இயற்றும் உறுப்புகள் இப்பகுதியில் அடங்கும். இரண்டு, பொருத்தமுறும்

  1. 6. உயிரனு-Cell.
  2. 7. இழையம்-Tissue.
  3. 8, உறுப்பு-Organ.
  4. 9. மண்டலம்-System.
  5. 10. நிலைநிறுத்தும் உறுப்புகள்-Maintaining organs