பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உறுப்புகள்[1]. தனியாள் தன் தேவைக்காகச் சூழ்நிலையின் தடங்கல்களை மேற்கொள்ளுமாறு இவை செயல்புரிகின்றன. பொறிகள்[2] , நரம்புத்தொகுதி, தசைகள் ஆகியவை இப்பகுதி யினுள் அடங்கும். இப்பிரிவும் பிரிவுகளிலுள்ள வேற்றுமைகளும் முற்றிலும் பொருத்தமானவையென்று கூற இயலாது. இவை இணைந்தும் தொழில் புரிகின்றன. (எ.டு) குருதியோட்டம் நிலைநிறுத்தத் தொழிலிலும், பொருத்தமுறும் தொழிலிலும் பங்கு பெறுகின்றது; நிலை நிறுத்தம் உறுப்புகளின் நிலைமையினால் ஒர் ஆளின் .ெ எருத்தமுறும் தொழில்கள் பாதிக்கப்பெறுகின்றன. ஈண்டு பொருத்தமுறும் உறுப்புகளை மட்டிலும் ஆராய்வோம்.

மனித உடலில் நிகழும் செயல்களும் மனிதன் தன்மனத்தால் மேற்கொள்ளும் செயல்களும் துண்டல்[3] துலங்கல்[4] என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை. இச்செயல்கள் யாவும் தனியாளுக்கும் அவனுடைய சூழ்நிலைக்கும் இடையே நிகழ்பவை. இவை யாவும் தனியாள்மீது சூழ்நிலை[5] கொள்ளும் ஆதிக்கத்தையோ, அன்றி, சூழ்நிலையைத் தனியாள் பயன்படுத்துவதையோ, அன்றி, சூழ்நிலைக்கேற்றவாறு தன்னைப் பொருத்தமுறச் செய்தலையோ காட்டும். இவ்வாறு சூழ்நிலையையும் தனியாளையும் இணைத்து வைத்துப் பொருத்தமுறச் செய்வதில் பங்குப்பெறுதலே பொருத்தமுறும் உறுப்புகளின் செயலாகும்.

பொருத்தமுறுதலில் பங்கு பெறும் உறுப்புகளை மூவகையாகப் பகுத்துப்பேசுவர் உளவியலார். அவை:

(அ) புகுவாய்கள் :[6] இ ன வ தூண்டல்களை ஏற்கும் உறுப்புகளாகும். எடுத்துக்காட்டாக-மணியொலி செவிகள் மூலம் புகுகின்றது. மின்னொலி கண்கள்மூலம் புகுகின்றது. சூடு, குளிர் போன்றவை தோலின்மூலம் புகுகின்றன. இங்ங்ணம் ஐம்பொறிகளிலுள்ள[7] தனிப்பட்ட உயிரணுக்கள் மூலம் சூழ் நிலையைப்பற்றிய செய்திகள் புலப்படுவதால் அவற்றைப்

  1. 11. பொருத்தமுறும் உறுப்புகள்-Adjusting organs.
  2. 12, பொறிகள்-Sense organs.
  3. 13. தூண்டல்-Stimulus.
  4. 14. துலங்கல்-Response.
  5. 15. சூழ்நிலை-Environment.
  6. 16. புகுவாய்கள்-Receptors.
  7. 17, பொறிகள்-Sense organs.