பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாயில் உமிழ் நீர் சுரக்கின்றது. இச் செயல்களையும் மேற் கண்டவாறு விளக்கலாம். இவற்றில் செயற்படுபவை, சுரப்பிகள்.

(இ) பொருத்துவாய்கள்[1] : இவை பொருத்தும் கருவிகளாம். இவை புகுவாய் உயிரணுக்களையும் இயங்குவாய் உறுப்புகளையும் இணைக்கின்றன. நரம்புத் தொகுதியும் குருதி யோட்டமும் பொருத்துவாய்களாகும். இவற்றுள் தரம்புத் தொகுதியே முக்கியமானது. பொதுவாக மானிட உடலில் புகுவாய்க்கும் இயங்குவாய்க்கும் நேர் இணைப்பு இல்லை; இவை மூளை அல்லது முதுகு நடு நரம்பு வழியாக இணைக்கப் பெறுகின்றன. புகுவாய்கள் தூண்டல்களால் தாக்கப் பெற்று அத் தாக்கல்களை ஏற்று அவற்றை நரம்புச் சக்தியாக மாற்றிப் பொருத்துவாய்கள் மூலம் இயங்குவாய்களுக்குச் செலுத்திச் செயல்கள், சிந்தனை, நீர் சுரத்தல் போன்ற துலங்கல்களை உண்டாக்குகின்றன. பள்ளிச் சிறுவன் ஒருவன் பள்ளித் தோட்டத்தில் அருநெல்லிக் கணிகளைக் காண்கின்றான். கணி களைக் கண்கள் (புகுவாய்) கண்டதும், இத்தாக்கல் மூளைக்குச் சென்று மூளையின் நடுவிடத்தின் (பொருத்துவாய்) துணையால் கைகளின் தசைகளை (இயங்குவாய்) இயக்குவித்துக் கனியைப் பறிக்கச் செய்கின்றன; வாயிலும் உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது.

குருதியோட்டமும் ஒரு முக்கியமான பொருத்துவாயாகும். இதுவும் உடலின் பல திறச் செயல்களையும் இணைத்துத் திட்டம் செய்கின்றது. உடலின் ஒரு பகுதியில் நிகழும் பயன் குருதியோட்டத்தின்மூலம் அதன் அடுத்த பகுதிக்கு எடுத்துச் செல்லப்பெறுகின்றது. எடுத்துக்காட்டாக, மிதிவண்டியில்[2] பல மைல் தூரம் செல்லுகின்றோம். கால்தசைகள் முற்றும் சோர்வடைகின்றன; இப்பொழுது உடலின் மற்றத் தசைகளும் சோர்வுறும். காரணம், கால் தசை இயங்குவதால் உண் டாகும் வேதியியற்[3] பொருள்கள் குருதியால் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப் பெறுவதேயாகும்.

குருதி யோட்டத்தால் ஏற்படும் இணைப்புத் திட்டம் ஒரளவு ஹார்மோன்கள்[4] எனப்படும் உட்சுரப்பிச் சாறுகளால் நடைபெறுகின்றது. இச்சாறுகள் தூம்பிலாச் சுரப்பி


  1. 26. பொருத்துவாய்கள்-Conneetor or adjustors
  2. 27. மிதிவண்டி-Cycle.
  3. 28. வேதியியள்-Chemical.
  4. 29. ஹார்மோன்கள்-Harmones.