பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வளர்ந்து வரும் கல்வியியல்
ச. மெய்யப்பன். எம். ஏ.
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்


ணிவாசகர் பதிப்பகம் சிறந்த நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இலக்கியத் திறனாய்வு, நாட்டுப் புறவியல், மொழி வரலாறு, சிற்றிலக்கிய ஆய்வு எனத் திட்டமிட்டு ஒவ்வொரு துறைபற்றியும் சிறப்பான ஆய்வு நூல்களை வெளியிட்டு வருகிறது.

நூலின் தலைப்பு, பொருள், கட்டமைப்பு, தீர்வுகள் முதலியவற்றால் சிறந்து விளங்கும் வெளியீடுகள் அனைத்தையும் தமிழ் வழங்கும் இந்தியப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் பாட்நூற்களாக ஏற்றுக் கொண்டுள்ளன. தரமான முதல் தரமான கல்லூரிப் பாடநூல்களை வெளியிடும் பெரிய நிறுவனமாகப் பதிப்பகம் வளர்த்து சிறந்துள்ளது. பேரும் புகழும் பெற்றுத் திகழ்கிறது. சில நூல்கள் அவற்றின் தரத்தாலும் தன்மையாலும் பொருளமைப்பாலும் பலமுறைப் பாட நூல்களாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அதனால் அவை பல பதிப்புகளைப் பெறுகின்றன. நல்ல கல்விக்குச் சிறந்த பாடநூல்கள் உறுதுணையாகின்றன. அதற்கு மணிவாசகர் பதிப்பகத்தின் பங்களிப்பு பெரிது, மிகப் பெரிது. சீரிய நூல்களையே வெளிக்கொணரும் கொள்கையினால் மணிவாசகர் பதிப்பக முத்திரை தரமான பாடநூல்களை வெளியிடும் உயர் தரமான நிறுவனம் என அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

தொடக்க நாளிலிருந்தே கல்வியியல் பற்றிய பல ஆய்வு நூல்களைப் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது.


தமிழர் கண்ட கல்வி
கல்வி நெறி
அறிவாற்றல்
தமிழ் பயிற்றும் முறை
தமிழ் கற்பித்தல்