பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்கியோன் முகவுரை. 1......*S*3a...ALHADsa 1941-ம் ஆண்டு ஜூன் திங்கள். பள்ளித்தலேமை ஆசிரியின் பதவியை ஏற்றவுடன் யான் செய்ய வேண்டிய,பல வேலைகளில் பள்ளி நூல் நிலையத்தை நிறுவ வேண்டியதும் ஒன்முக இருந்தது. புதிய பள்ளியாதலால், ஆராய்ந்து எல்லாவித நூல்களையும் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏற்படவே, கவிஞர் பாரதியார் நூல்களையும் வாங்கினேன். எந்த நூல்களை வாங்கினுலும் ஒரு முறை அவற்றைப் படித்து விடுவது என்ற வழக்கத்தை யான் மேற்கொண்டிருக் கிறேன். ஆகவே, பாரதியார் நூல்களை முழுவதும் படிக்கத் தொடங்கினேன். அதற்கு முன்னதாகவே பாரதியாரின் பாடல் களில் சிலவற்றைக் கேட்டிருக்கிறேன். என்ருலும், அவரது நூல்கள் முழுவதையும் படிக்கும் பேறு அப்போதுதான் இடைத் தது. அதற்கு முன்னர் யான் தமிழ் நூல்களை ஆசையாகப் படித்ததில்லை. ஆங்கிலக் கல்வியில் ஆழ்ந்திருந்ததாலும், விஞ்ஞா ம்ை, கணிதம் போன்ற துறைகளில் ஆர்வமிக்கிருந்ததாலும் தமிழை நன்கு படிக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. பாாகியாாைப் படிக்கும் போது அவரது சுயசரிதையைக் கூறும் பாடல்கள் எனது உள்ளத்தைத் தொட்டன; அவை எனது வாழ்க்கையையும் போக்கையும் மாற்றி விட்டன என்று சொன்னலும் பொருந்தும். இக்கால ஆங்கிலக் கல்வியைக் கற்போாைப் பற்றிக் கூறும், ' கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர், பின் கார்கொள் வானிலோர் மீனிலே தேர்த்திலார்; அணிசெய் காவிய மாயிரக் கற்கினும் ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/13&oldid=781549" இலிருந்து மீள்விக்கப்பட்டது