பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix பேர சூட்சுடர் வாள்கொண் டிசேர்களுர் பிழை பட்து புவித்தலங் காத்ததும் வீரர் வாழ்ந்த மிலேச்சர்தந் தீயகோல் வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும், அன்ன யாவும் நிந்திலர் பாரதத் தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர் " என்ற பாக்கள் என்னைத் தமிழ்ப் படிக்கத் தூண்டின. கடந்த எழ்ாண்டுகளாகவே, ஒழிந்த நோங்களில், யான் தமிழ் இலக்கியங் களை முறையாகப் படித்து வருகிறேன். காவியப் போக்கிலும் கருத்து வளத்திலும் கம்பன் எனது மனதைக் கவர்ந்ததுபோல் வேறு யாரும் கவரவில்லை. இளங்கோ விடிகளின் சிலப்பதிகாரம் இராஜ நடையில் கம்பீரமாகச் செல்லு வதை அறிந்தேன். 'நவில் தொறும் நூல் ஈயம்போலும்” என்ற உண்மையை வள்ளுவனிடத்தில்தான் காணமுடிந்தது. ஒதம் கெளிதாயும் உணர்தற்களிதாயுமிருப்பதை திருக்குறளில் தான் கண்டேன். பிற்காலத்து இ லக் கி யங் கள் உயர்வு நவிற்சியணிகள் செறிந்து சிந்தனைக்கு விருந்தாக இருந்தன. பிறகு சங்க இலக்கி யங்கள்மீது எனது நாட்டம் சென்றது. தமிழ்மொழியின் உண்மை இயல்பையும், அதன் பெருமையையும், பழந்தமிழர்களின் சீரிய வாழ்க்கை முறைகளையும், சங்க இலக்கியங்களில்தாம் காண முடியும். சீரிய தமிழ்த்தாய் எழில்களெல்லாம் திாண்டிருக்கும் மங்கைப் பருவத்துடன், ஒரு அரசிளங் குமரிபோல், அரியாசனத் தில் திருவோலக்கம் கொண்டிருக்கும் காட்சியைச் சங்க இலக்கியங் களில்தாம் பார்க்கலாம். சங்க இலக்கியங்களைப் பயின்று வருவ தில் உள்ள இடர்ப்பாடுகள் ஆசிரியர் துணையின்றிப் பயில்வார்க்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/15&oldid=781593" இலிருந்து மீள்விக்கப்பட்டது