பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன ஆச்சரியம்? ' இனிமேல் காலாகாலத்தில் வந்து சாப்பிடா விட்டால் உன்னை அடிப்பேன்." {{ ஏன் ? ” ' ஏ ை? காலேயில்தான் குளித்தாய் , தலே சீவிக் கொண்டாய் பூச்சூட்டிக் கொண்டாய். இப்போது பார்த்தால் ஒரே காட்டேரி மாதிரி இருக்கிருயே. இனி மேல் கண்ட இடத்தில் போய் விளையாடு! பிறகு பேசிக் கொள்ளுகிறேன்.” இப்படியாக அன்னேக்கும் ஐந்து வயதுடைய அவளது மகளுக்கும் பேச்சு கடந்தது ஒரு நாள். அந்த் சமயத்தில் செவிலித்தாய், ஒரு பொற்கலத்தில் பாற் சோறு கொண்டுவந்தாள் அச்சிறுமிக்கு ஊட்டுவதற்கு. நன்ருகக் காய்ச்சிய பாலில் சீரகச் சம்பா அரிசிச் சோறு கலந்த உணவு அது. அவளுக்கும் கோபந்தான் தனது மகள்(வளர்ப்பு மகள்) காலத்தில் வந்து உண்ணவில்லையென்று. அவளே மிரட்டுவதற்காகக் கையில் பூப்போன்ற மெல்லிய நுனியையுடைய கோல் ஒன்றைக் கொண்டு வந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/19&oldid=781619" இலிருந்து மீள்விக்கப்பட்டது