பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கவிஞன் உள்ளம் "இனிமேல் வந்து சாப்பிடாவிட்டால் அடிதான். இந்தா இதைச்சாப்பிடு" என்று அச்சிறுமியை அதட்டி ள்ை அவள் வளர்ப்பு அன்னே. அவள்தான அதற்குப் பயப்படுபவள் ? வெடுக்" கென்று அன்னேயின் கைகளிலிருந்து தப்பித்துக்கொண்டு ஓடினுள். ஒடிய காட்சியே இன்பத்தை அளித்தது தாய்மார்களுக்கு செல்வத்திற்குக் குறைவில்லாததால் அவளுக்கு ஆடைகளுக்கும் அணிகலன்களுக்கும் குறை வில்லை. கண்ணுக்கினிய நல்ல மெல்லிய துணியால் தைக்கப்பட்ட பாவாடையையும் சட்டையையும் அணிந்திருந்தாள். கழுத்தில் மெல்லிய முத்துமாலேயும், மெல்லிய தங்கச் சங்கிலியும் காட்சியளித்தன. காலில் பொற்சிலம்பு அணிந்திருந்தாள் ; சிலம்பினுள் ஒளியை யுடைய முத்துக்கள் பரல்களாக அமைந்திருந்தன. இத்தகைய அழகான உருவம் வளைந்து வளைந்து ஒடி ல்ை பார்ப்பவர்கள் யாருக்குத்தான் இன்பத்தை அளிக்காது ? சிறுமியின் ஓட்டத்தில் உள்ளத்தைப் பறி கொடுத்தாள் செவிலித்தாய். அவளுக்கும் வயது ஆய் விட்டது. தலையிலும் கரை, தட்டிவிட்டது. 'கையில் பொற்கலத்தில் உணவை வைத்துக்கொண்டு அச் சிறுமியை ஒடிப்பிடிக்க முடியவில்லை. என்ருலும், சிறுமியின் ஓட்டத்தின் அழகை தனது கண்களால் பருகிக்கொண்டே தள்ளாடித் தள்ளாடி ஒடுகிருள் அவளேப் பிடிப்பதற்கு. சிறுமிக்குத் தெரியும் நன்னே அன்னே பிடிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/20&oldid=781622" இலிருந்து மீள்விக்கப்பட்டது