பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கவிஞன் உள்ளம் அக்குக் கல்யாணம் ஆகும்போது ஏராளமான சொத் துக்கள் இருந்தன. ஊழ்வினப்பயனல், எல்லாச் ச்ெல்வத்தையும் இழக்க நேரிடுகிறது. அன்ருட வாழ்க்கைக்கே சம்பாதிக்க வேண்டிய கிலேயும் வருகி தது. இப்படி எளிய வாழ்க்கை கடத்தும் நாட்களில், சில சமயம் இருவரது உணவிற்கும் போதிய வருவாய் வருவதில்லே. அந் நாட்களில் கணவனுக்கு உணவு அளித்து, எஞ்சியதைத் தான் உண்பாள் ; இல்லாவிட் டால் பட்டினியாகவும் கிடப்பாள். இப்படியாக அவள் எளிய வாழ்க்கை கடத்தும் செய்தி அவள் பிறந்த வீட்டுக்கு எட்டுகிறது. கற்ருயும் செவிலியும் மிக வருத்தம் அடைகிருர்கள். பொது வாக தாய்மார்கள்தாம் தம் மகள் விஷயத்தில் அதிகக் கவலை கொள்ளுவது உலக இயற்கை. ஒரு காள் தனது மகளைப் பார்க்கச் செவிலித்தாய் வருகிருள்: சில நாட்கள் மகள் வீட்டில் தங்குகிருள். அன்ருட நிகழ்ச்சிகளே நேரில் காண்கிருள்; ஒரு சில நாட்கள் தனது மகள் பட்டினியாகவும் இருந்து வருவதைப் பார்க்க நேரிடுகிறது. எவ்வளவு செல்வத்தில் வளர்ந் தவள் கணவனுக்குத்தான் சொத்து இல்லையா ? அவையெல்லாம் இப்பொழுது எங்கே? என்ன செய் வது ? விதியை யார்தான் வெல்ல முடியும்? இந்த எளிய நிலையில் வாழ்க்கையைச் சவிப்பின்றி கடத்த தனது மகள் எங்கு பழகிக்கொண்டாள் ? எப்போது பழகிள்ை? என்ன ஆச்சரியம் இது?...... என்றெல்லாம் செவிலித்தாய் எண்ணத் தொடங்குகிருள். தனது மக ளது இல்வாழ்க்கை அவளுக்குப் பெரிய ஆச்சரியத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/22&oldid=781626" இலிருந்து மீள்விக்கப்பட்டது