பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழங்கயிறு 7 கவிஞன் ஒருவன் இந்தக் காட்சியைக் காண நேரிடுகின்றது. உலக வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்கள் இக் கயிற்றின் நிலையில் திண்டாடுவது கண் கூடு. அங் கிலேயை எளிதில் அறியவல்ல இக் கவிஞன் தான் கண்ட காட்சியுடன் அங்கிலேயைப் பொருந்த வைத்துப் பார்க்கிருன். புற உலகில் தான் கண்ட காட்சியை உவமான மாக வைத்து அக உலகில் ஒரு உயிர் ஒவியத்தை உண் டாக்குகிருன். உயிர் ஒன்று உடல் இரண்டாக வாழ்ந்த காதலர் களில், பொருள் சம்பாதிப்பதற்காகக் கா த ல ன் காதலியை விட்டுச் சிலகாட்களே பிரிகிருன். மரமும் செடியும் காய்ந்து போன பாலேகிலத் தில், கடுமையான வெயிலில் அவன் தனிமையாகச் செல்லுகிருன்; சிந்தனே தேக்கிய முகத்துடன் கடந்து சென்று கொண்டிருக்கிருன். காட்டில் வெறும் உடல்தான் கடந்து செல்லு கிறது; உள்ளம் பூராவும் அவளிடத்தில் இருக்கிறது. சதா அவளது நினைவு தான். தன் மனதில் அவளது உருவத்தைக் காண் கிருன். புறக்கண்களால் அவ்வுருவத்தின் அழகை அனுபவிக்க முடியாவிட்டாலும், அவளது அழகு துளும்பும் உருவத்தை அவனது அகக்கண் அனுப வித்து நிற்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/25&oldid=781632" இலிருந்து மீள்விக்கப்பட்டது