பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறைப்பட்ட உள்ளம் கானுங் காட்சிகளைக் கவிதைகளில் பாய்ச்சி அலங்கரித்தார்கள் அன்றைய தமிழ்க் கவிஞர்கள். சங்ககால இலக்கியங்களைப் படித்து அனுபவிப்பவர்கள் இத்தகைய இயற்கைக் காட்சிகளைக் கொண்ட பாடல் களைப் பார்க்கலாம். தமிழ்க்கவிஞர் ஒருவர் குன்றவாணர்கள் வாழும் மலே நாட்டு வழியே பிரயாணம் செய்ய நேர்கிறது. இயற்கை வனப்புகளே அனுபவித்துச் சென்றவர், சில நிகழ்ச்சிகளையும் காண்கிரு.ர். இன்று தெருவில் காட்டப்படும் கயிற்றின்மீது கடக்கும் வித்தை அன்றும் நடைபெற்று. வந்தது. இன்றும் பேர்போன சர்க்கஸ் கம்பெனியார் இத் தகைய வித்தைகளைக் காட்டி வருகின்றனர். நாகரீகம் வளர வளர சாதாரண நிகழ்ச்சிகளும் கலைகளாக மாறிவிடும் இளமையில் குழந்தைகளிடமும் சிறுவர்களிடமும் அரும்பும் விளையாட்டுணர்வுகள்தாம் நாளடைவில் இன்று நாம் காணும் நாடகக்கலை, காட்டியக்கலை - ஆகிய கலைகளாக வளர்ந்து விட்டன என்று உளநூல்வல்லுகர் கூறுகிருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/29&oldid=781640" இலிருந்து மீள்விக்கப்பட்டது