பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கவிஞன் உள்ளம்

  • *

for 3 அன்றும் கயிற்றில் கடக்கும் வித்தை நடப்ப துடன் நின்றுவிடவில்லை. இன்று சர்க்கஸ் கம்பெனி களில் காட்டப்பெறும் கயிற்று நடனம் (rope dance) போல் அன்றும் நடைபெற்று வந்தது: சங்க இலக்கியங் களில் இதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. ö、 சாதாரணமாகக் கயிற்று கடனம் நடைபெறுங் கால் இசைக்கருவிகள் ஒலிக்கும். ஆடும் பெண் கண்ணேயும் கருத்தையும் காட்டியத்திலும் பாட்டிலும் செலுத்திக் கவனமாக ஆடுவாள். இம்மாதிரியான அபூர்வக் காட்சிகள் நடைபெறுங்கால் இமை கொட் டாது மக்கள் சிலபோல் இருப்பார்கள் காட்சிகளே அனுபவித்த வண்ணம் இருப்பார்கள். கடைசியில் " சபாஷ் ” போட்டுக் கைகொட்டுவார்கள். கவிஞர் மலேகாட்டு வழியே போய்க்கொண்டிருக் கும் போது ஒரு தோப்பில் இத்தகைய கயிற்று கடனம் ஒன்று நடைபெறுகிறது. கவிஞரும் ஆட்டத்தைப் பார்க்கிருர் அனுபவிக்கிருர், ஆட்டம் முடிவடைகிறது: கூட்டமும் கலேகிறது. ஆட்டக்காரர்கள் கயிற்றை அவிழ்க்காது உணவுண்ணச் செல்கிருர்கள். கவிஞரும் பசி ஆற்றிக்கொள்ளிப் பக்கத்திலுள்ள அருவிக்குச் செல்கிருர், அந்தத் தோப்பில் குரங்குகள் ஏராளம். அத்திப் பழம் போன்ற முகத்தையும் பஞ்சு போன்ற தலையை யும் உடைய குரங்குக்குட்டி ஒன்று கயிற்றின்மீது ஏறுகிறது. கயிற்றின் வழியாக நடக்கவும் ஆரம்பிக் கிறது. கிளைகளில் எளிதாகச் செல்லுவது போல,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/30&oldid=781644" இலிருந்து மீள்விக்கப்பட்டது