பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறைப்பட்ட உள்ளம் #3 கயிற்றின்மீது எளிதாகச் செல்ல முடியவில்லை. இப் படியும் அப்படியும் ஆடுகிறது: தத்தளித்து நடக்கிறது. தோப்பிற்கருகாமையில் உள்ள ஒரு பாறையின் மீதிருந்த குன்றவாணச் சிறுவர்கள் இந்தக் குட்டியின் செயலேப் பார்க்கிருர்கள்; சற்று நேரத்திற்கு முன்னர் நடைபெற்ற கயிற்று கடனத்தைப் பார்த்தவர்கள் அவர்கள். பெண் ஆடினது போல் குரங்குக்குட்டியும் ஆடுகிறது என்று எண்ணி, அது அசையும்போதெல் லாம், அந்த அசைவுகளுக்கேற்றபடி, கைகொட்டித் தாளம் போடுகிருர்கள். அருவியில் பசியாற்றிக் கொண்டிருக்கும் கவிஞர் இக்காட்சியையும் காண்கிருர், அதை அனுப விக்கிருர். அங்கிகழ்ச்சி அவரது நெஞ்சில் பதிவு பெறுகிறது. o * :* * * ** w్మ * இயற்கைப் புணர்ச்சி நடைபெற்ற நாள்முதல் அவன் அவள் நினைவாகவே இருக்கிருன். அந்த நாள் முதல் அவன் கற்ற கல்வியறிவும் அவனிடம் வளர்ந்த இயற்கை அறிவும் அவனுக்குத் துணையாக நிற்க வில்லை. காதல் உணர்வு அவற்றை யெல்லாம் கவித்து விடுகிறது சதா எதையோ கினேத்த வண்ணம் இருக்கிருன். அவனது ஆருயிர் நண்பன் அவனிடம் என்றும் பார்க்காத மாறுதல்களைக் காண்கிருன்; கவலை கொள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/31&oldid=781646" இலிருந்து மீள்விக்கப்பட்டது