பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. கவிஞன் உள்ளம் கொண்டார்கள். எங்கெங்கோ வரன் பார்த்தார்கள். பல மாப்பிள்ளைகள் வருவதும் போவதுமாக இருந்தார் கள் அவர்களில் ஒருவர்கூட அவளுக்குப் பிடித்த வராக இல்லே. அவளது உள்ளத்தைக் கொள்ளே கொண்டவனிருக்க பிறர்மேல் எங்ங்னம் மனம் நாடும்? இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் எல்லாம் தோழிக்குத்தான் அதிகப் பொறுப்பு. சில சமயம் அறத்தொடு நிற்பாள். தலைவி இன்ன தலைவனுடன் கட்புக் கொண்டிருக்கிருள் என்ற உண்மையை முகமாகவோ மறைமுகமாகவோ அவளது பெற்ருேர் களுக்குக் கூறி அத்தலைவியின் கற்புக்குச் சார்பாக நிற்றலே அகப்பொருள் நூலார் 'அறத்தொடு நிற்றல் என்று கூறுவார்கள். தலைவியின் நிலையையும் அவள் இருக்கும் சூழ் கிலேகளையும் சரியாக உணராது தனது களவொழுக்கம் ஒன்றையே குறியாகக் கொண்டு ஒழுகும் தலைவனுக்குப் பலவிதமாகத் தலைவியின் நிலையை எடுத்துக்கூறுவாள்: பகலிலும் இரவிலும் ஆவலுடன் வரும் அவனுக்கு சிலசமயம் குறிகளே நேர்ந்தும் சிலசமயம் குறிகளே மறுத்தும் அனுப்பி விடுவாள். சிலசமயம் நேர்வாள்போல் கூறி, அதன் அருமையை உணர்த்தி, வரைவு கடாவுவாள்; பலர் அறியும்படி தலைவியை மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்று தலைவனுக்கு அடிக்கடி கூறி அவனேக் கற்பு மணத்துக்கு இணங்கச் செய்வாள். இப்போது தோழி அவனைத் திருமணத்துக்கு இணங்கச் செய்துவிட்டாள். அவர் கல்யாணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/38&oldid=781661" இலிருந்து மீள்விக்கப்பட்டது