பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊர் அடங்கிற்ற: 21 செய்துகொள்ள ஒப்புக்கொண்டு விட்டார் ” என்ற நற்செய்தியை அவளுக்கும் அறிவித்தாள். அவளது காதல் ஒழுக்கத்தைப்பற்றி ஊரார் பலவிதமாகப் பேசிக்கொள்ளுகிருர்களே என்று இது • f". o * o w 峻 * * காறும் தோழி வருந்திக்கொண்டிருந்தாள் அவளும் வீட்டுக்குள்ளேயே யிருந்து கொண்டு மனம் குமுறிக் கொண்டிருந்தாள். “ ஊர் வாய்ககு உலேமூடி போட்டாய்விட்டது” என்ற செய்தியை மிக ஆர்வுத்துடனும் பெருமிதத் துடனும் அவளுக்கு அறிவித்தாள். இச்செய்தியை ஒரு வரலாற்றை உவமையாகக் கொண்டு அவளுக்குத் தெரிவிக்கிருள் தோழி. இராமர் சீதையை மீட்கும் பொருட்டு இலங் கைக்குச் செல்லும்போது தனக்குத் துணையாக வந்த சுக்கிரீவன், அனுமான் முதலியோருடன் ஒரு ஆலமரத் தின் அடியில் தங்கி அரிய வேதங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது அம்மரத்தின் மீதிருந்த பறவைக் கூட்டங்கள் ஒலித்து அவருக்குத்தொந்தரவை உண்டாக்கின. இராமர் தனது ஆணேயால் அவ் வொலியை அடக்கினர். அதுபோலவே அவர்களது திருமணத்தால் ஊராரது துாற்றல் பேச்சும் அடங்கி விட்டது ' என்று உணர்த்துகிருள். தோழியின் பேச்சில் சில அடிப்படையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/39&oldid=781663" இலிருந்து மீள்விக்கப்பட்டது