பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கவிஞன் உள்ளம் அதல்ை அவள் அதை நன்கு அறிந்திருந்தாள். அவளது வீட்டைச் சுற்றிலும் ஒரே வயல் : மிக்க நீர்வளமுள்ள இடம். அக்கம் பக்கம் எல்லாம் பல குளங்கள். அக் குளங்களில் வரால், வாளை, கெண்டை முதலிய மீன் கள் ஏராளமாக இருந்தன. அவற்றை அந்த நிலத்தைச் சார்ந்த மக்கள் தாண்டிலால் பிடிப்ப்து வழக்கம். குளங்களில் வள்ளேயும் குவளையும் ஆம்பலும் செழிப் புடன் முளேத்திருந்தன. சில சமயம் வரால் மீனைப் பிடிப்பது கஷ்டம்ாகி விடும்; தூண்டிலில் குத்தப்பட்டுள்ள இரையைக் தெளவும். பிறகு வாயை எடுக்க முடியாது தத்தளிக் கும். தூண்டிற்காரன் இழுத்தாலும் வருவதில்லை; துள்ளிக்குதிக்கும். அங்ங்னம் குதிப்பதால் குவளே மலர்களே முறித்து, அக்குவளே மலரைச் சுற்றியிருக்கும் வள்ளைக்கொடியை வளைத்து பகலில் எல்லோரும் காணும்படியாகக் குளத்தையே அலேக்கழித்து விடும். அப்போது அதைக் கயிற்றினல் கட்டப்பட்ட மதங் கொண்ட ஒரு காளைக்கு ஒப்பிடலாம். போரிலிருந்து திரும்பி வந்த சில நாட்களில் அவனது மனேவிக்குக் குழந்தை பிறந்தது. பிறந்து சில் நாட்கள்தாம் ஆயின. ஒரு நாள் தலைவன் எங்கோ வெளியில் சென்ருன். இரண்டு மூன்று நாட்கள் வீடு திரும்பவில்லை. அவனது மனைவிக்குச் சந்ேதகம் ஏற் பட்டது. சென்றவன் திரும்பி வந்தான். "எங்கு சென்றிருந்தீக்கள்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/44&oldid=781673" இலிருந்து மீள்விக்கப்பட்டது